"நண்பனுக்காக சபதம்.." பட்டப் பகலில் கதையை முடித்த ரவுடி.!! புதுச்சேரியில் பயங்கரம்.!!
நண்பனுக்காக சபதம்.. பட்டப் பகலில் கதையை முடித்த ரவுடி.!! புதுச்சேரியில் பயங்கரம்.!!
பாண்டிச்சேரி மாநிலத்தில் ஆட்டோ டிரைவர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களை அச்சமடைய செய்திருக்கிறது.
புதுச்சேரி மாநிலத்தில் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்தவர் லூர்து. இவர் வழக்கம் போல் தனது பணியில் இருந்த போது அவரை சுற்றி வளைத்த சில ரவுடிகள் பட்டப் பகலில் நடு ரோட்டில் வைத்து ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தனர். சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவரான லூர்து தனது நண்பனின் கொலைக்கு பழி வாங்குவதற்காக பிரபல ரவுடியான கௌதம் என்பவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதால் படுகொலை செய்யப்பட்டதாக காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக ரவுடி கௌதம் மற்றும் அவரது ஆட்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: "ஐயோ மோசம் போயிட்டோமே.." மூதாட்டி கொலையில் திடீர் திருப்பம்.!! அதிர்ச்சியில் கொள்ளையர்கள்.!!
கொலை செய்யப்பட்ட லூர்துவின் நண்பரான ருத்ரேஷ் என்பவரை ரவுடி கௌதம் மற்றும் அவரது ஆட்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர். தனது நண்பனின் சாவிற்கு பழிவாங்குவதற்காக ரவுடி கௌதமை கொலை செய்ய லூர்து திட்டம் தீட்டி வந்திருக்கிறார். இதனைப் பற்றி அறிந்த கௌதம், லூர்தை பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: மது குடிப்பதில் தகராறு... ஏமானாக மாறிய நண்பர்கள்.!! இளைஞர் படுகொலை.!!