போடுடா பாட்ட..! கொரோனா வார்டில் குத்தாட்டம் போட்ட கொரோனா நோயாளிகள்..! வைரல் வீடியோ.!
Asymptomatic COVID19 positive patients organised a flash mob at a COVID care center

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தப்பட்டவர்கள் முகாமில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அறிகுறி இல்லாதவர்கள் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது.
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேமாக பரவிவருகிறது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற பகுதிகள் கொரோனாவால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் அரசின் தீவிர முயற்சியால் பெரும்பாலானோர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிவருகின்றனர். பலர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தப்பட்டவர்கள் முகாமில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அறிகுறி இல்லாதவர்கள் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது.
சிகிச்சை ஒருபுறம் இருந்தாலும், நோயாளிகளின் கவலை மற்றும் மன சோர்வை போக்க பல இடங்களில் இதுபோன்று ஆட்டம், பாட்டம், நடனம் என இந்த முயற்சியும் நல்ல பலன் தருகிறது. இதோ அந்த வீடியோ.