கல்லூரி மாணவியை திட்டமிட்டு சீரழித்த காம பேராசியர்கள்.. வீடியோ எடுத்து நடந்த கொடுமை.!
திருப்பதி பல்கலைக்கழகத்தில் பேராசியர் ஒருவர் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.
திருப்பதி சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தில் மாணவியை பேராசியர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதியில் தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த மாணவி ஒருவர் முதல் ஆண்டு பயின்று வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக லக்ஷ்மன் குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.
மாணவியை பலாத்காரம் செய்த உதவி பேராசிரியர்:
இதனிடையே லக்ஷ்மன் குமார் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவத்தில் மாணவி கர்ப்பமாகியதாக தெரிய வருகிறது. மேலும் லக்ஷ்மன் குமார் மாணவியுடன் தனிமையில் இருக்கும்போது அதனை மற்றொரு பேராசிரியரான சேகர் என்பவர் படம்பிடித்து மாணவியை மிரட்டி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: "மொபைல் வாங்கி தரட்டுமா... உன் சைஸ் என்ன"...? 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை.!! தனியார் கல்லூரி பேராசிரியர் கைது.!!
மாணவி கர்ப்பம்:
இது குறித்து மாணவி தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரிடம் புகார் அளித்த நிலையில், துணைவேந்தர் பேராசிரியர் லக்ஷ்மன் குமாரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவி ஒடிசா சென்ற நிலையில், லக்ஷ்மன் குமார் மற்றும் சேகர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.