×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குடிபோதையில் குடும்பத்தையே கொன்னுட்டாரே...! மதுபோதையில் கணவர் ஓட்டிய கார் மரத்தில் மோதி.. 9 வயது மற்றும் 2 மாத குழந்தைகள் துடிதுடித்து பலி..! மனைவி மருத்துவமனையில்... நெஞ்சை உலுக்கும் காட்சி..!!!

அசாம் மோரிகானில் மதுபோதையில் தந்தை ஓட்டிய கார் மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டதில் 9 வயது சிறுமி, 2 மாத குழந்தை உயிரிழந்தனர்.

Advertisement

அசாம் மாநிலம் மோரிகான் பகுதியில் மதுபோதையில் தந்தை ஓட்டிச் சென்ற கார் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், 9 வயது சிறுமியும் 2 மாத பச்சிளம் குழந்தையும் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் பலியான இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த தாய் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மரத்தின் மீது மோதிய கார்

நபஜ்யோதி போரா என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் மனைவியின் வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் மதுபோதையில் காரை ஓட்டியுள்ளார். மோரிகான் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தின் மீது பலமாக மோதியது.

இதையும் படிங்க: நொடியில் 26 பேர் உயிரையும் காவு வாங்கிட்டே..! அக்காவை பார்க்க ஆசையாக போன தங்கைகளும் துடிதுடித்து பலி..! ஒரே குடும்பத்திலே 3 பேர்... கதறும் குடும்பத்தினர்..!!!

2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கார் மோதியதில் 9 வயது சிறுமி மற்றும் 2 மாதமே ஆன பச்சிளம் குழந்தை ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது தாய் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுபோதையில் வாகனம் ஓட்டுவோர் மீது நடவடிக்கை கோரிக்கை

அசாமில் மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்த விபத்தைத் தொடர்ந்து, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: அடக்கடவுளே...! சாவு தான் தீர்வா..? 2 சகோதரிகள் தங்களது 4 குழந்தைகளுடன் எடுத்த விபரீத முடிவு....! அதில் ஒரு சகோதரி 8 மாத கர்ப்பிணி வேற... நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#அசாம் விபத்து #மதுபோதையில் வாகனம் #Assam Accident #drunk driving #இரண்டு சகோதரிகள்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story