கட்டிலுக்கு அடியில் 13 வயது சிறுமி.. அனுதினமும் நடந்த பதறவைக்கும் கொடுமை.. அதிர்ச்சி காட்சிகள்.!
6 ஆண்டுகளாக 13 வயது சிறுமியை கொத்தடிமையாக பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
13 வயது சிறுமியை கொத்தடிமையாக பயன்படுத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி, பஞ்சபாரி பகுதியில் வசித்து வருபவர் அம்ரின் அக்தர் லஷ்கர். இவரது வீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக 13 வயது சிறுமி வீட்டு வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதாவது, சிறுமியை அம்ரின் மற்றும் அவரது குடும்பத்தினர் கொத்தடிமை போல பயன்படுத்தி வந்துள்ளனர். இதனிடையே, சிறுமிக்கு தற்போது 13 வயதாகும் நிலையில், தினமும் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் கொடுமையும் நடந்து வந்துள்ளது.
களத்தில் இறங்கிய அதிகாரிகள்:
சமீபத்தில் சிறுமி அனுபவிக்கும் கொடுமைகள் குறித்த தகவல் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சிறுமியை மீட்க கோரி உள்ளூர் மக்கள் குழந்தைகள் நலத்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதன்பேரில் அதிகாரிகள் அம்ரினின் வீட்டில் சம்பவத்தன்று அதிரடி சோதனை நடத்தி இருந்தனர். அப்போது, அதிகாரிகள் வருவதை அறிந்துகொண்ட அம்ரின், சிறுமியை படுக்கைக்கு அடியில் 25 நிமிடங்கள் மறைத்து வைத்துள்ளார்.
இதையும் படிங்க: விபத்தில் சிக்கியவருக்கு இப்படி ஒரு நிலையா?.. பிளேடோடு தைத்து அனுப்பிய அரசு மருத்துவர்கள்.. வலியால் துடித்த இளைஞர்.!
பாலியல் வன்கொடுமை:
அதிகாரிகள் விரைந்து வந்து வீடு முழுவதும் சோதனை செய்த நிலையில், சந்தேகத்தின் பேரில் வீட்டின் அறையில் இருந்த கட்டிலில் விரிவான சோதனை செய்தார். அப்போது, சிறுமி கட்டிலுக்குள் மறைத்து வைக்கப்பட்டது கண்டறியப்பட்டது. சோதனைக்குப்பின் சிறுமியை மீட்ட அதிகாரிகள் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். மேலும், சிறுமியை கொத்தடிமை போல பணியமர்த்தி, பாலியல் வன்கொடுமை செய்த அம்ரின் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி விசாரணையும் நடந்து வருகிறது. சிறுமி மீட்கப்பட்ட காட்சிகள் வைரலாகி வருகின்றன.
அதிர்ச்சிதரும் வீடியோ: