பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்கள்! அதிர்ச்சி சம்பவம்!
army man died
ஜம்மு காஷ்மீரில் உள்ள சியாச்சின் மலைப்பகுதியில் பாதுகாப்பிற்காக இந்திய ராணுவ வீரர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பிற்பகல் 3 மணியளவில் டோக்ரா ரெஜிமெண்டில் இருந்து மற்றொரு போஸ்டிற்கு 6 ராணுவ வீரர்கள் மற்றும் 2 போர்டர்கள் சென்று கொண்டிருந்தனர்.
இதனையடுத்து பனிச்சரிவு மீட்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பனிச்சரிவில் சிக்கிக் கொண்ட 8 பேரையும் வெளியே கொண்டு வந்தனர். இவர்களில் 7 பேர் படுகாயம் அடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தனர்.
மீட்கப்பட்ட வீரர்கள் அனைவரும் ஹெலிகாப்டர்கள் மூலம் அருகிலுள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி 6 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.