×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கலவரத்தை தடுக்க களமிறங்கிய ராணுவத்தினர்..!! பற்றி எரியும் வீடுகள்..!! பதறும் மணிப்பூர்..!!

கலவரத்தை தடுக்க களமிறங்கிய ராணுவத்தினர்..!! பற்றி எரியும் வீடுகள்..!! பதறும் மணிப்பூர்..!!

Advertisement

ராணுவத்தினரும், மணிப்பூர் மாநில காவல்துறையினரும் கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் வாழ்ந்துவரும் மெய்டீஸ் என்கிற பழங்குடியினர் அல்லாத சமுகத்தினர் தங்களுக்கு பட்டியலின பழங்குடியினர் அந்தஸ்த்து வழங்குமாறு அம்மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில், இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டியலின பழங்குடியினர் போராட்டத்தில் குதித்தனர்.

இந்த போராட்டத்தின் காரணமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. சவ்ரசந்திரபூர் மாவட்டத்தில் இரு தரப்பினரும் நேற்று கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டன. மேலும் கார்கள், இருசக்கர வாகனங்கள், கடைகள் உள்ளிட்டவைகளுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறை சிறிது, சிறிதாக அண்டை மாவட்டங்களுக்கும் பரவியது.

இதனை தொடர்ந்து, பரவிவரும் கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும், கலவரம் தொடர்பான வீடியோக்கள், சமூகவலைதளங்களில் பரவுவதை தடுக்க மணிப்பூர் மாநிலம் முழுவதும் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், கலவரத்தை கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினரும், மணிப்பூர் காவல்துறையினரும் கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த கலவரத்தால் மணிபூரின் 8 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரபரப்பு தொற்றியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#manipur #Manipur Riot #Army Security #மணிப்பூர் மாநிலம் #மணிப்பூர் கலவரம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story