×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆதார் அட்டையை புதுப்பிக்க போறிங்களா.? உங்களுக்கான குட் நியூஸ் இதோ.!

ஆதார் அட்டையை புதுப்பிக்க போறிங்களா.? உங்களுக்கான குட் நியூஸ் இதோ.!

Advertisement

ஆதார் அட்டை இந்திய குடிமகன்களின் தனித்துவமான அடையாள அட்டையாக இருந்து வருகிறது. இந்திய மக்களுக்கான ஒருங்கிணைந்த அடையாள அட்டையாக ஆதார் 2009 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த அதார் அடையாள அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஆதார் அட்டை புதுப்பிப்பதற்கு 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என யூஐடிஏஐ அறிவித்திருந்தது. மேலும் இந்த ஆதார் அட்டையை  இலவசமாக புதுப்பிப்பதற்கான காலத்தவனையையும் கொடுத்திருந்தது.

அதன்படி ஜூன் 14ஆம் தேதி வரை அதார் அட்டையை புதுப்பிப்பவர்கள் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என அந்த ஆணையம் அறிவித்திருந்தது. இந்த காலத் தவணையை செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நீட்டித்து புதிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தது யூஐடிஏஐ.

தற்போது இந்த கால அளவை மேலும் மூன்று மாத காலத்திற்கு  நீடித்து புதிய ஆணையை வெளியிட்டு இருக்கிறது யுஐடிஏஐ. இந்த புதிய அறிவிப்பின்படி அதார் அட்டையை புதுப்பிப்பவர்கள் டிசம்பர் 14ஆம் தேதி வரை  இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என  அதார் அட்டைக்கான ஆணையம் அறிவித்திருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Adhar #UIDAI #Renewal Date Extension #Good news #3 Months
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story