×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

டெல்லி தேர்தலில் அமோக வெற்றி..! "ஐ லவ் யூ" சொன்ன அரவிந்த் கெஜ்ரிவால்..!

Aravind kejirval says I love you for voter

Advertisement

டெல்லியில் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. நடந்து முடிந்த தேர்தலில் 62.59 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் துவங்கியது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்தே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்று வருகிறது.

நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களைவிட அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதால், மூன்றாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க உள்ளது. பாஜக இரண்டாம் இடத்தில் உள்ளது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார். சுனிதாவின் பிறந்தநாளை இன்று கேக் வெட்டி கொண்டாடிய கெஜ்ரிவால், டெல்லி தேர்தல் வெற்றியை மனைவிக்கு பரிசாக வழங்குவதாக தெரிவித்துள்ளார். கட்சி அலுவலகத்தில் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மக்கள் அசத்திவிட்டிர்கள். "ஐ லவ் யூ" என தெரிவித்தார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#delhi #election #Kejirival
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story