புஷ்பா ன்னா உண்மையிலேயே பயர் தான்.. திருமணம் பிடிக்காததால், மணமகனின் கழுத்தை அறுத்த பயங்கரம்.!
புஷ்பா ன்னா உண்மையிலேயே பயர் தான்.. திருமணம் பிடிக்காததால், மணமகனின் கழுத்தை அறுத்த பயங்கரம்.!
பெற்றோர்கள் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காத காரணத்தால் நிச்சயம் செய்யப்பட்ட பெண் மணமகனின் கழுத்தை அறுத்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அநாகப்பள்ளி, மாடுகுலப்பள்ளி அத்திப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ராமா நாயுடு (வயது 28). இவர் ஐதராபாத்தில் இருக்கும் பல்கலை.,யில் பி.எச்.டி பயின்று வருகிறார். இவருக்கும், ராதிகமாட்டம் கிராமத்தில் வசித்து வரும் புஷ்பா (வயது 22) என்ற பெண்ணுக்கும் திருமண நிச்சயம் பெற்றோர்களால் செய்யப்பட்டது.
திருமணத்தில் விருப்பம் இல்லாத புஷ்பா அதனை பெற்றோரிடம் தெரிவிக்கவே, பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று புஷ்பாவின் பெற்றோர் பத்திரிக்கை வைக்க வெளியூர் சென்றுள்ளனர். அப்போது, மணமகனுக்கு தொடர்பு கொண்ட புஷ்பா பரிசு தருவதாக அழைத்துள்ளார்.
வருங்கால மனைவி அழைக்கிறார் என்பதால் ராமா நாயுடுவும் புறப்பட்டு சென்ற நிலையில், கோவிலுக்கு செல்லலாம் என அழைத்து சென்று, அதற்கு முன்னதாக கேக் வெட்டி கொண்டாடலாம் என கடையில் புஷ்பா கேக் வாங்கியுள்ளார். பின்னர், இருவரும் கேக்கை மாறிமாறி ஊட்டிக்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, கண்களை கட்டு இன்ப அதிர்ச்சி தருகிறேன் என்று புஷ்பா கூற, புஷ்பா பூ கொடுப்பார் என்று எண்ணி கண்களை கட்டியவருக்கு கழுத்தில் கத்தியால் வெட்டு விழுந்துள்ளது. இரத்த வெள்ளத்தில் ராமா நாயுடு கண்களை திறந்து கீழே சரிய, புஷ்பா அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்துள்ளார்.
மருத்துவமனையில் அவர் கீழே தடுக்கி விழுந்து கத்தி காயம் ஏற்பட்டது என அனுமதி செய்ய, மருத்துவர்களுக்கு சந்தேகம் இருந்ததால் சிகிச்சையை தொடங்கியவாறு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.