அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி ஓட்டுநர் பலி; தீப்பிடித்து நொடியில் நடந்த பயங்கரம்.. பகீர் வீடியோ உள்ளே.!
அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கி ஓட்டுநர் பலி; தீப்பிடித்து நொடியில் நடந்த பயங்கரம்.. பகீர் வீடியோ உள்ளே.!
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம், ஹைதராபாத் பி.என் ரெட்டி நகர் பகுதியில் நேற்று இரவு ஆம்புலன்ஸ் விபத்திற்குள்ளானது. ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலைத்தடுப்பில் மோதி தீப்பற்றி எறிந்த நிலையில், இடிபாடுக்குள் சிக்கிய ஓட்டுனரின் உடலை அப்பகுதி இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு மீட்டனர்.
இளைஞர்களில் சிலர் ஆம்புலன்சில் இருந்து சில அடி தூரத்தில் நின்று கொண்டு இருந்த நிலையில், ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதனால் மீட்பு பணிக்கு வந்த இளைஞர்கள் லேசான காயம் அடைந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் இப்ராஹிம்பட்டினம் பகுதியில் நோயாளியை இறக்கிவிட்டு, ஆம்புலன்ஸ் மீண்டும் மருத்துவமனைக்கு வந்த வழியில் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. அதிவேகத்தின் காரணமாகவே விபத்து நடந்தது விசாரணையில் உறுதியாகியுள்ளது.