×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அக்கா கணவருக்கு விஷ ஊசி.. குடும்பத்துடன் ரயில் முன் பாய்ந்து விபரீதம்.. பலகோடி சொத்துக்காக திரைப்படத்தை மிஞ்சும் நிஜம்.!

சொத்துக்காக அரங்கேறிய கொலை சம்பவம் இறுதியில் பல உயிர்களை பறித்தது.

Advertisement

பலகோடி சொத்துக்கு ஆசைப்பட்ட இளைஞர் அக்கா கணவரை விஷஊசி செலுத்தி கொலை செய்துவிட்டு, பின் தனது குடும்பத்தையும் கொலை செய்து தானும் மடிந்தார்.

பலகோடி சொத்துக்கள்:

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டம், புச்சிரெட்டிப்பாலம் கிராமத்தில் வேளாண்மை அதிகாரியாக வேலை பார்த்து வந்தவர் ஸ்ரீஹரி. இவரின் மனைவி லாவண்யா. இவரின் இளைய சகோதரர் மைத்துனர் ஸ்ரீ ஹரிகிருஷ்ணா. வேளாண் அதிகாரியான ஸ்ரீஹரி, மைத்துனர் ஹரிகிருஷ்ணாவின் (வயது 33) பெயரில் கோடிக்கணக்கான சொத்துக்களை பதிவு செய்து, பணமும் கொடுத்து வைத்திருந்துள்ளார். 

இதையும் படிங்க: "தப்பு பண்ணிட்டோம் தூக்குல தொங்கிடலாம்".. கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை.. இறுதியில் பறிபோன உயிர்.!

மாமா கொலை:

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தான் கொடுத்து வைத்த அசையும்-அசையா சொத்துக்களை வேளாண் அதிகாரி ஸ்ரீஹரி மைத்துனரிடம் வீடு கட்டுவதற்காக கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஹரிகிருஷ்ணா பணம் கொடுப்பதாக கூறி அவகாசம் கேட்டு இருக்கிறார். ஆனால், மறைமுகமாக சொத்துக்களை கைப்பற்ற நினைத்தவர், ஸ்ரீஹரியை கொலை செய்ய திட்டமிட்டார். ஜூன் மாதம் 15ம் தேதி சேகரியை பெஞ்சுலக்கேனா கோயிலுக்கு அழைத்துச் சென்றவர், நண்பர்கள் உதவியுடன் மாமாவை கொலை செய்துள்ளார். 

மரணத்தில் மர்மம்:

பின் குடும்பத்தினரிடம் கோயிலுக்குச் சென்று வரும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு ஸ்ரீஹரி உயிரிழந்ததாக கூறி இருக்கிறார். இதனைக்கேட்ட குடும்பத்தினரும் நம்பிக்கை காரணமாக உடலை தகனம் செய்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து முடிந்த சில நாட்களுக்குள்ளாகவே ஹரி எஞ்சிய சொத்துக்களை தனது பெயரில் பதிவு செய்துள்ளார். இதனால் லாவண்யா சந்தேகமடைந்த நிலையில், கணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை:

இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, ஹரிகிருஷ்ணாவின் நண்பர்கள் ரவீந்திரா, யானதி என்பவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது உண்மை அம்பலமான நிலையில், தலைமறைவான ஹரிகிருஷ்ணாவுக்கு வலைவீசப்பட்டது. இந்த வழக்கில் அதிகாரிகள் சரிவர விசாரணை நடத்தாத காரணத்தால், அந்த காவல் நிலையத்தில் இருந்த 23 ஊழியர்களும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். காவல் ஆய்வாளர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார்.

தற்கொலை:

மறுபக்கம் குடும்பத்துடன் தலைமறைவான ஹரிகிருஷ்ணாவை அதிகாரிகள் தேடி வந்த நிலையில், அதிகாரிகள் எப்படியானாலும் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்று அறிந்தவர் மனைவி பிரகதி, குழந்தைகள் மூகாம்பிகா (வயது 5), கவுசி கிருஷ்ணா (வயது 3) ஆகியோருடன் சிங்கராயகொண்டா ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இத சம்பவத்தில் நால்வரும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த ரயில்வே காவல்துறையினர், நால்வரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க: 21 வயது இளம் பேட்மிட்டன் வீரரின் உயிரை பறித்த காதல்.. சித்ரவதை செய்து நடந்த கொடூரம்? குடும்பத்தினர் கண்ணீர்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Murder #suicide #Andhra Pradesh AO
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story