×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளக்காதலிக்கு ஸ்கெட்ச்.. பலரிடம் பேசியதால் பயங்கரம்.. துள்ளத்துடிக்க பெண்ணை கொலை செய்த சைக்கோ கள்ளக்காதலன்.!

கள்ளக்காதலியை கொடூரமாக கொலை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Advertisement

36 வயதான கள்ளக்காதலியை கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் அதிர்ச்சிதரும் தகவல் வெளியாகியுள்ளது.

பால் வியாபாரி மீது சந்தேகம்:

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஏலூரு மாவட்டம், சவுரிபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் விஷாலி (வயது 36). இவர் தனது கணவருடன் வசித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 18ம் தேதி அங்குள்ள குடிவாடா பகுதியில், உறவினரின் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். பின் அவர் மீண்டும் வரவில்லை, செல்போனும் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. இதுதொடர்பாக பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பெண்மணி இறுதியாக பால் வியாபாரியான பிரான்சிஸ் சவுரி (வயது 36) என்பவருடன் பேசியது உறுதி செய்யப்பட்டது. இவர் தலைமறைவாக இருந்ததால் அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்துள்ளது.

இதையும் படிங்க: 'என் நம்பரை பிளாக் பண்றியா' காதலனை வீடுபுகுந்து கதைமுடித்த காதலி.. பகீர் சம்பவம்.!

கள்ளக்காதலுக்கு ஸ்கெட்ச்:

இதனையடுத்து, பிரான்சிஸ் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் பல பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. பிரான்சிஸ் சவுரி விஷாலின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் கடன் கொடுத்துள்ளார். வட்டியும் வசூல் செய்யப்பட்டுள்ளது. அப்போது, விஷாலியுடன் தொடர்பை ஏற்படுத்தி இருக்கிறார். விஷாலி பலரிடம் செல்போனில் பேசி வந்த நிலையில், இதனை கள்ளக்காதலன் பிரான்சிஸ் கண்டித்து இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு உண்டாகி இருக்கிறது. இந்த ஆத்திரத்தில் கள்ளக்காதலியை கொலை செய்யும் எண்ணத்துக்கு பிரான்சிஸ் சென்றுள்ளார்.

கொலை சம்பவம்:

சம்பவத்தன்று விஷாலிக்கு பணம் கொடுப்பதாக வரவழைத்த பிரான்சிஸ், இருசக்கர வாகனத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு விஷாலியை சரமாரியாக தாக்கி, கயிறால் கழுத்தை நெரித்துள்ளார். மயங்கி விழுந்த பெண்ணின் மீது கருங்கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு சடலத்தை புதரில் வீசி தலைமறைவாகி இருக்கிறார். பின் 5 நாட்கள் கழித்து சடலத்தை குழிதோண்டி புதைத்து இருக்கிறார். பெண்மணி உயிருடன் இருப்பதை நம்பவைக்க வாட்ஸாப்ப்பில் விஷாலின் கணவருடன் சாட்டிங் செய்து வந்துள்ளார். இறுதியில் சிக்கிக்கொண்டுள்ளார்.
 

இதையும் படிங்க: காதல் திருமணம் கசந்ததால் கள்ளக்காதல்.. வீடெல்லாம் ரத்த வெள்ளம்.. அரங்கேறிய பயங்கரம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #India #illegal affair #பெண் கொலை #கள்ளக்காதலன்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story