அம்மாடியோவ்... எவ்வளவு பணம்..! எம்எல்ஏ வீட்டு திருமணத்தில் வாரி இறைத்த பணக்கட்டுகள்..! கைகளால் அள்ள முடியாமல் கடைசியில் அவர்கள் செய்த அந்த ஒரு காரியத்தை பாருங்க... வைரல் வீடியோ..!!!
பீகார் முன்னாள் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங்கின் மகள் திருமணத்தில் நடனக் கலைஞர்கள் மீது லட்சக்கணக்கில் பணம் தூவப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பீகார் மாநில முன்னாள் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங்கின் மகள் திருமணம், அதன் பிரம்மாண்டம் மற்றும் ஆடம்பரத்தால் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. பாட்னா மாவட்டம் நத்வா கிராமத்தில் புதன்கிழமை (நவம்பர் 25) நடைபெற்ற திருமண விழாவில், நடனக் கலைஞர்கள் மீது லட்சக்கணக்கில் பணம் தூவப்பட்ட காட்சிகள் வைரலாகி வருகின்றன.
திருமணத்திற்கு முந்தைய ஹல்தி, மெஹந்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சிகளின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. குறிப்பாக, மேடையில் நடனமாடிய கலைஞர்கள் மீது பணக் கட்டுகளை வாரி இறைக்கும் காட்சிகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.
நடனக் கலைஞர்கள் மீது பணம் தூவிய காட்சிகள்
வைரலாகும் வீடியோக்களில், நடனக் கலைஞர்கள் மேடையில் ஆடும்போது விழாவில் கலந்துகொண்டவர்கள் அவர்கள் மீது பணத்தைத் தூவுவது பதிவாகியுள்ளது. ஒரு காட்சியில் ஆனந்த் சிங் மேடையில் அமர்ந்திருப்பதையும், மற்றொரு காட்சியில் தரையில் சிதறிக் கிடக்கும் பணத்தை அகற்றுவதையும் பார்க்க முடிகிறது.
விழா முடிந்ததும் தரையில் குவிந்திருந்த பணத்தை விளக்குமாறு கொண்டு கூட்டிச் சேர்த்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், திருமண நிகழ்ச்சியில் தூவப்பட்ட பணத்தின் மொத்த தொகை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
ஜெய்ப்பூர் அரண்மனை பாணியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்
ஆனந்த் சிங்கின் இளைய மகள் சிவாங்கி சிங் திருமணத்திற்காக நத்வா கிராமத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பேலஸ் பாணியில் பிரம்மாண்ட மேடைகளும் பந்தல்களும் அமைக்கப்பட்டிருந்தன. அவரது மனைவியும் எம்.எல்.ஏ.வுமான நீலம் தேவி, பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடி குடும்பத்தினருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
பீகாரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும் திருமண விழாவில் கலந்துகொண்டனர். பொதுமக்கள் அனைவரும் வந்து உணவு உட்கொள்ளலாம்; இதற்கு தனியாக அழைப்பிதழ் தேவையில்லை என ஆனந்த் சிங் முன்பே அறிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
திருமண விழா நிறைவடைந்த நிலையில், அதன் ஆடம்பர ஏற்பாடுகளும் கலை நிகழ்ச்சிகளின்போது பணம் வாரி இறைக்கப்பட்ட காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.