×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செல்ஃபியால் வந்த வினை... திக்..திக் நிமிடங்கள்.! 2000 அடி பள்ளத்தில் விழுந்த நபர்... உயிர் பிழைத்தது எப்படி.?

செல்ஃபியால் வந்த வினை... திக்..திக் நிமிடங்கள்.! 2000 அடி பள்ளத்தில் விழுந்த நபர்... உயிர் பிழைத்தது எப்படி.?

Advertisement

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்  செல்ஃபி மோகத்தால் 2000 அடி அருவியில் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டிருக்கும் சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மோகன் சவான் என்ற இளைஞர் தனது நான்கு நண்பர்களுடன் விடுமுறை தினத்தை முன்னிட்டு அஜந்தா குகை கோவில்களை சுற்றி பார்க்க சென்றிருக்கிறார். போய் கோவிலை சுற்றி பார்த்துவிட்டு அஜந்தா குகை கோவிலின் மலையின் உச்சிக்கு சென்று இருக்கின்றனர்.

இந்த மலைக்கு அருகே சப்த குண்டா நீர்வீழ்ச்சி உள்ளது. இது அஜந்தா கோவை கோவிலும் மழையையும் பிரிக்கக்கூடியதாகும். சுமார் 2000 அடி ஆழமுள்ள இந்த அருவிக்கு அருகே நின்று செல்பி எடுத்துள்ளனர். நிறைய புகைப்படங்கள் எடுத்த பின்பும் செல்ஃபி மோகம் தீராத மோகன்  அருவிக்கு விளிம்பில் நின்று செல்பி எடுத்து இருக்கிறார்.

அப்போது கால் வழுக்கி  அருவியில் 2000 அடி  ஆழத்தில் விழுந்துள்ளார். நல்ல வேலையாக அவருக்கு நீச்சல் தெரிந்ததால் நீரிலிருந்து நீந்தி அருகில் உள்ள ஒரு பாறையை பிடித்து தப்பித்திருக்கிறார். பின்னர் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு கயிறு மூலம் அவரை காப்பாற்றி இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #maharastra #ajantha cave temple #Water Falls #Selfie Craze
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story