"கடவுளின் சொந்த தேவதைகள் அவர்கள்" மருத்துவமனை ஊழியர்களுக்கு புகழாரம் சூட்டும் அமிதாப்பச்சன்!
Amitabh bachan says gods angel as hospital staffs

இந்தி திரையுலகின் உச்சநட்சத்திரமான நடிகர் அமிதாப் பச்சனுக்கு கடந்த 11-ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நடந்த பரிசோதனையில் மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதில் ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகியோர் குணமாகி இரண்டு நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினர். எனினும் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன் இருவரும் தொடர்ந்து மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அமிதாப்பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், "வெள்ளை நிற PPE யூனிட்டிற்குள் இருக்கும் கடவுளின் சொந்த தேவதைகள் தான் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மற்ற ஊழியர்கள். எங்களுடைய உடல் நலனிற்காக அவர்கள் அதிகம் சிரமப்படுகின்றனர்.
இருப்பினும் தங்களது நோயாளிகளுக்கும் சேர்த்து அவர்கள் தினமும் இறைவனிடம் வேண்டுகின்றனர்" என்று பதிவிட்டுள்ள அவர் இரண்டு விதமான ஜெபங்களையும் பகிர்ந்துள்ளார்.