×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்தியாவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது அமெரிக்கா! இந்தியாவின் பாதுகாப்பு பலம் கூடுகிறது!

America gives STA1 status to india

Advertisement

உலக நாடுகளின் வல்லரசாக பார்க்கப்படும் நாடு அமெரிக்கா. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் எப்பொழுதுமே நட்பு ரீதியான உடன்பாடு உண்டு. இந்நிலையில் பாதுகாப்பு துறையில் முக்கியத்துவம் வாய்த்த ஒரு அங்கீகாரத்தை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது அமெரிக்கா.

அது என்ன அங்கீகாரம்? அதனால் இந்தியாவிற்கு என்ன பயன்? பாதுகாப்புத் துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் எஸ்.டி.ஏ-1 அங்கீகாரத்தை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.

இந்த அங்கீகாரத்தின் மூலம் அமெரிக்காவின் அதி நவீன தொழிநுட்ப தயாரிப்புகளை இந்தியாவால் இனி எளிதில் பெற முடியும். இந்த அங்கீகாரத்தின் மூலம் எஸ்.டி.ஏ-1 எனப்படும் அமெரிக்க தயாரிப்புகளை வாங்க வர்த்தக அங்கீகாரம் பெற்ற நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 

இது மட்டும் இல்லாமல் இனி அமெரிக்காவில் தயாரிக்கப்படும் அதிநவீன சக்தி வாய்ந்த தயாரிப்புகளை இந்தியாவால் இனி எளிதில் பெற முடியும். இது இந்தியவதின் பாதுகாப்பு துறைக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.

மேலும், எஸ்.டி.ஏ-1 அங்கீகாரம் பெற்ற நாடுகள் பட்டியலில் உள்ள ஒரே தெற்காசிய நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.டி.ஏ-1 அங்கீகாரம் பெற்றதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒப்புதல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#STA-1 status #India #எஸ்.டி.ஏ-1 #அங்கீகாரம் #அமெரிக்கா #இந்தியா
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story