Breaking: கேரளாவில் இரண்டு துண்டுகளாக உடைந்து விழுந்த ஏர்-இந்தியா விமானம்..! 180 பேரின் கதி என்ன..?
Air India Express flight with 180 on board crashes while landing at Kozhikode airport

துபாயில் இருந்து ஏர்-இந்தியன் விமானம் (IX-1344) கேரளாவின் கோழிக்கோடு கரிபூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கீழே விழுந்து இரண்டு துண்டுகளாக உடைந்துள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.45 மணியளவில் இந்த விமான விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி துபாயில் இருந்து வந்த இந்த விமானத்தில் 174 பயணிகளும், இரண்டு விமானிகள் உட்பட ஆறு பணியாளர்களும் இருந்துள்ளனர்.
விமானத்தின் விமானிகளில் ஒருவரான கேப்டன் தீபக் வசந்த் இறந்துவிட்டதாகவும், இணை விமானி ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, விமானம் 35 அடி ஆழத்தில் சரிவில் விழுந்து இரண்டு துண்டுகளாக உடைந்துள்ளது. இந்த விபத்தின் ஆரம்ப புகைப்படங்கள் விமானம் அதன் நடுப்பகுதியில் இருந்து இரண்டு துண்டுகளாக உடைந்திருப்பதைக் காட்டுகிறது.
கோழிக்கோடு விமான நிலையம் மங்களூரு விமான நிலையத்தைப் போலவே ஒரு டேபிள்-டாப் விமான நிலையமாகும், அங்கு 2010 ல் விமானம் விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் ஒரு பயணியைத் தவிர மற்ற அனைவரையும் உயிரிழந்தனர்.
தற்போது நடந்துள்ள இந்த விமான விபத்தில் உள்ளூர்வாசிகள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர், அதே நேரத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விமான நிலையத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை உயிரிழந்தவர்கள், மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை.