தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விமானத்தின் அவசர கதவை திறந்து நூலிழையில் உயிர் தப்பிய பயணி! ஆபத்து நேரத்தில் அதை திறப்பது எப்படி தெரியுமா? வைரலாகும் வீடியோ காட்சி...

விமானத்தின் அவசர கதவை திறந்து நூலிழையில் உயிர் தப்பிய பயணி! ஆபத்து நேரத்தில் அதை திறப்பது எப்படி தெரியுமா? வைரலாகும் வீடியோ காட்சி...

air-crash-survivor-video-goes-viral Advertisement

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மிகப்பெரிய துயர சம்பவத்தை எதிர்கொண்டது. லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா Boeing 787-8 ட்ரீம்லைனர் விமானம், மதியம் 1:39 மணிக்கு சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்தில் சிக்கியது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 242 பேருடன் பயணித்த விமானம், பயங்கர விபத்திற்கு உள்ளானது. இதில் ஒருவர் மட்டும் தான் உயிருடன் மீண்டுள்ளார் என்ற தகவல் பெரும் கவலையை ஏற்படுத்தியது.

மருத்துவக் கல்லூரி விடுதியில் விழுந்த விமானம்

இந்த விமானம் ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியின் மேல் விழுந்ததால், மாணவர்களும் இதில் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உடல்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு கருகியுள்ளன

விபத்தில் பலியானோரின் உடல்கள் தீக்கிரையாகி அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், டிஎன்ஏ பரிசோதனை முடிந்த பின் முழுமையான பட்டியல் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: விமான விபத்தில் யாரையும் காப்பாற்ற முடியாமல் போனதற்கு என்ன காரணம் தெரியுமா? டாக்டரின் கனவு கருகி ஒட்டு மொத்த குடும்பமும் பலி..!

மத்திய அரசின் நடவடிக்கை

இந்த விபத்தை தொடர்ந்து, ஏர் இந்தியா விமானங்களின் பாதுகாப்பு நிலை குறித்து அறிக்கை அளிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

உயிர் தப்பிய ஒரே பயணி கூறும் அனுபவம்

விபத்தில் உயிர் தப்பிய ஒரே பயணியானவர், “எனது சீட் தானாகவே கழன்றது. அவசர கதவுக்கு அருகில் இருந்ததால் அதைத் திறந்து வெளியே குதித்தேன்” என கூறினார். விபத்துக்குப் பின் விழித்த போது சுற்றிலும் உடல்கள் சிதறி கிடந்ததாகவும், “நான் உயிர் பிழைத்தேன் என்பது நம்ப முடியவில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

வைரலாகும் அவசர கதவுச் செயல்பாட்டு வீடியோ

இந்நிலையில், ஒரு விமான பணிப்பெண் பயணிகளுக்கு அவசர கால கதவுகளை எப்படி திறப்பது என்பதைக் கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஒருவர் அவசர கதவை திறந்து வெளியேறும் முறையை செயலில் காண்பிக்கிறார். இதனை நன்கு புரிந்துகொண்டு செயல்பட்டதால் அந்த பயணிக்கு உயிர் தப்பியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

 

--

இதையும் படிங்க: விமான விபத்தில் யாரையும் காப்பாற்ற முடியாமல் போனதற்கு என்ன காரணம் தெரியுமா? டாக்டரின் கனவு கருகி ஒட்டு மொத்த குடும்பமும் பலி..!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#விமான விபத்து #Air crash #உயிர் பிழைத்த பயணி #emergency exit video #viral flight video
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story