அதிஷ்டத்தில் நடந்த அதிசயம்! மைனர் சிறுவன் ஓட்டிய கார் மோதி தூக்கி வீசப்பட்ட 3 வயது சிறுமி! காரின் அடியில் சிக்கி... இறுதியில் நடந்த ட்விஸ்ட்... பகீர் வீடியோ..!!
அகமதாபாத்தில் சிறுவன் ஓட்டிய கார் 3 வயது சிறுமியை மோதிய அதிர்ச்சி சம்பவம்! உயிர் தப்பிய சிறுமி சமூக வலைதளங்களில் வைரல். போலீசார் விசாரணை தீவிரம்.
அகமதாபாத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்களின் மனதில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்மார்களின் இதயத்தை உறைய வைக்கும் இந்த அதிர்ச்சி விபத்து குறித்த காட்சிகள் தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
மூன்று வயது சிறுமி மீது மோதிய கார்
அகமதாபாத்தின் ஷிவ் பங்களாஸ் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், ஒரு மைனர் சிறுவன் கார் ஓட்டிக் கொண்டிருந்தபோது, தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி மீது நேரடியாக மோதியுள்ளார். மோதிய தாக்கத்தில் சிறுமி காரின் அடியில் சிக்கி தூரம் தள்ளி வீசப்பட்டார். அந்த தருணத்தை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
சம்பவம் நடந்த சில நொடிகள் கழித்து, சிறுமி காரின் அடியில் இருந்து மெதுவாக ஊர்ந்து வெளியே வந்து, எதுவும் நடக்காதது போல் வீட்டை நோக்கி நடந்துசென்றார். இதை கண்ட அனைவரும் நம்ப முடியாத அளவுக்கு அதிர்ச்சியடைந்தனர். சிறுமிக்கு எவ்வித காயமும் இல்லை என்பது பெரும் அதிசயமாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: பயங்கர வேகத்தில் வந்த கார் டிராபிக் போலீஸ் மீது மோதி! காற்றில் தூக்கி வீசப்பட்டு பல அடி உயரத்திற்கு விழுந்த சிசிடிவி காட்சி!
தாய் மைனர் டிரைவரை அறைந்த காட்சி வைரல்
இச்சம்பவத்துக்குப் பின்னர், சிறுமியின் தாய் தன்னுடைய கோபத்தை அடக்க முடியாமல், அந்த மைனர் டிரைவரை கடுமையாக அறைந்தது வீடியோவில் தெளிவாக காணப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் சிறுமியின் நிலையைப் பரிசோதித்து, உடனடியாக அவளை பாதுகாப்பாக வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர்.
போலீசார் விசாரணை தொடங்கினர்
இந்தச் சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரில் எண் பலகை இல்லாததுடன், மைனர் என்பதால் ஓட்டுநர் உரிமம் இல்லாதது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கார் யாருக்குச் சொந்தமானது, அந்த சிறுவனுக்கு யார் வாகனத்தை வழங்கினர் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். வாகன உரிமையாளருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த நிகழ்வு பெற்றோர்களுக்கும் சமூகத்திற்கும் ஒரு பெரிய எச்சரிக்கையாகும். சிறுவர்களின் கையில் வாகனத்தின் சாவி கொடுப்பது எவ்வளவு அபாயகரம் என்பதை இந்தச் சம்பவம் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. பொறுப்பற்ற ஓட்டுநரால் ஏற்பட்ட இந்த விபத்து சமூக விழிப்புணர்வை மீண்டும் எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: பார்க்கும்போது பதறுது! பேருந்து மோதியதில் நொடியில் பலியான 2 பேர்! யாரு மேல தான் தப்பு! பதறவைக்கும் சிசிடிவி காட்சி....