ஐயோ.. என் புள்ளைக்கு இப்படியா ஆகணும்? தாய் கண்முன்னே 9 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்..! 20 அடி ஆழ கழிவுநீர் வடிகாலில் கால் தடுமாறி விழுந்த சிறுமி... நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!
குஜராத் அகமதாபாத்தில் 20 அடி ஆழ திறந்த சாக்கடையில் 9 வயது பார்வைத்திறனற்ற சிறுமி தவறி விழுந்தார். அவரை மீட்க தீயணைப்புப் படையினர் தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், திறந்தவெளி சாக்கடைக்குள் 9 வயது பார்வைத்திறனற்ற சிறுமி தவறி விழுந்தார். நரோல்-பிரானா சாலையில் சுமார் 20 அடி ஆழமுள்ள கழிவுநீர் வடிகாலில் விழுந்த அவரை மீட்க தீயணைப்புப் படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சிறுமி விழுந்த இடத்தில் இருந்து வடிகால் பாதை முழுவதும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.
ரிக்ஷா கட்டணம் செலுத்தியபோது நேர்ந்த விபரீதம்
சிறுமி தனது தாயுடன் அந்தப் பகுதியில் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது. தாய் ரிக்ஷா கட்டணத்தைச் செலுத்திக் கொண்டிருந்தபோது, பார்வைத்திறனற்ற சிறுமி எதிர்பாராதவிதமாகக் கால் தடுமாறி திறந்திருந்த சாக்கடைக்குள் விழுந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைக் கண்ட குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும் உடனடியாகச் சிறுமியைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால், சாக்கடையின் ஆழம் மற்றும் கழிவுநீரின் ஓட்டம் காரணமாக அவர்களால் மீட்க முடியவில்லை.
இதையும் படிங்க: காதலனுடன் பொது இடத்தில் தனியாக இருந்த இளம்பெண்...! பெண்ணின் மார்பை தொட்டு... அத்துமீறிய வாலிபர் கும்பல்! அட்டூழிய வீடியோ...!!!
ஒரு கிலோமீட்டர் தூரம் வரை தேடுதல்
இதையடுத்து காவல்துறைக்கும் தீயணைப்பு மீட்புப் படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர், சிறுமி விழுந்த வடிகால் பாதையில் தேடுதல் பணியைத் தொடங்கினர். இதுவரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை வடிகாலுக்குள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பம்பிங் நிலையம் அருகிலும் சோதனை
சிறுமி விழுந்த வடிகால் பாதை, அருகிலுள்ள பிரதான பம்பிங் நிலையம் மற்றும் பெரிய கழிவுநீர் குழாய்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால், அந்தப் பகுதிகளிலும் மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். சிறுமியைக் கண்டுபிடிக்கும் வரை தேடுதல் பணி தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திறந்தவெளியில் பாதுகாப்பின்றி இருக்கும் கழிவுநீர் வடிகால்கள் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலை மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: இன்ஸ்டா மூலம் தொடங்கிய காதல்...! திருமணம் செய்ய காதலன் வீட்டு வாசலில் தர்ணா... இளம்பெண் செய்த பரபரப்பு செயல்..!!!