×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

15 நாள் டைம் தரேன் அதுக்குள்ள சொத்து வரி கட்டு இல்லாட்டி சீல் வைப்பேன்!: தாஜ்மகாலுக்கு நோட்டீஸ் அனுப்பிய மாநகராட்சி..!

15 நாள் டைம் தரேன் அதுக்குள்ள சொத்து வரி கட்டு இல்லாட்டி சீல் வைப்பேன்!: தாஜ்மகாலுக்கு நோட்டீஸ் அனுப்பிய மாநகராட்சி..!

Advertisement

தாஜ்மஹாலுக்கு தண்ணீர் மற்றும் சொத்து வரி கட்டாததால் ஆக்ரா மாநகராட்சி நோட்டிஸ் அனுப்பியுள்ளது. 

டெல்லியில் உள்ள தாஜ்மகாலுக்கு ரூ.1.5 லட்சம் சொத்துவரி மற்றும் ரூ.1.9 கோடி ரூபாய் குடிநீர் வரியை செலுத்துமாறு ஆக்ர மாநகராட்சி, தாஜ்மஹால் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வரி அனைத்தும் 2021- 22 மற்றும் 2022-23 நிதியாண்டுக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தொல்லியல்துறைக்கு வரியை கட்ட‌ மாநகராட்சி நோட்டிஸ் அனுப்பியுள்ளது. 15 நாட்களில் வரிகளை கட்டா விட்டால் தாஜ்மஹாலுக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
சொத்து வரி நினைவு சின்னங்களுக்கு கிடையாது. வணிகரீதியாக பயன்படுத்தாத தண்ணீருக்கு வரி செலுத்த வேண்டியதில்லை. பசுமையை பராமரிக்க தாஜ்மஹால் வளாகத்திற்குள் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. தாஜ்மஹாலுக்கான சொத்து வரி முதல்முறையாக விதிக்கப்பட்டுள்ளது. இந்திய தொல்லியல் கண்காணிப்பு ஆய்வாளர் ராஜ்குமார் படேல் இது தவறுதலாக அனுப்பப்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்திருத்துள்ளார்.

தாஜ்மஹால் வரி குறித்த நடவடிக்கைகள் பற்றி எனக்கு தெரியாது. வரிகளை கணக்கிடுவதற்க்காக ஆக்ரா முழுவதும் புவியியல் தகவல் அமைப்பு கணக்கெடுப்பின் அடிப்படையில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில், அரசு கட்டிடங்கள், மத வழிபாட்டு தலங்கள் உட்பட அனைத்து வளாகங்களுக்கும் நிலுவையில் இருக்கும் வரி தொகை கணக்கெடுக்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சட்டத்தை சரியாக செயல்படுத்துபவர்களுக்கு பதள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்திய தொல்லியல் துறை அளிக்கும் பதிலின் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் நிகில் டிஃபண்டே தெரிவித்துள்ளார்.

ஆக்ரா சுற்றுலா நல வாரிய செயலாளர் விஷால் சர்மா இந்த நோட்டீஸ் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். அதில், தாஜ்மஹால் மத்திய அரசின் சொத்து, 
உலக பாரம்பரிய சின்னம்.  நினைவுச்சின்னத்திற்கு ஏன் ஆக்ரா முனிசிபல் கார்ப்பரேஷன் வரி வசூலிப்பு அறிவிப்பை அனுப்பியது என்று புரிந்துகொள்ள முடியவில்லை. மேலும் தாஜ்மஹால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக 1920-ல் 102 வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. 

நினைவுச் சின்னத்திற்கு வீட்டுவரி நோட்டீஸ் அனுப்பப்படுவது இதுவே முதல்முறை என்று அவர் கூறினார். பிரிட்டிஷ் அரசாங்கம் கூட தாஜ்மஹாலை வீட்டு வரியின் கீழ் கொண்டு வரவில்லை என்றும், இந்த நோட்டீஸ் ஏன் அனுப்பப்பட்டது என்பதை ஆக்ரா மேயர் விளக்கம் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Agra Corporation #Issue Notice #Taj mahal #property tax
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story