×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனைவியை அந்த கோலத்தில் தம்பியுடன் பார்த்த கணவன்! அண்ணிக்காக சொந்த அண்ணனுக்கு தம்பி செய்த கொடூரம்...!!!

உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் அண்ணனைக் கொலை செய்த வழக்கில் தம்பி கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளத்தொடர்பு விவகாரம் காரணமாக நடந்த கொலை போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

Advertisement

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் குடும்ப உறவுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவி மற்றும் தம்பி இடையேயான தவறான உறவை கண்டித்ததால், 22 வயதான அமித் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆக்ராவின் சுல்தான்புரா பகுதியில் வசித்து வந்த அமித், அங்குள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றி வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்ட அவர், அண்மையில் தனது மனைவி குஷி மற்றும் தம்பி போலா இடையே இருந்ததாகக் கூறப்படும் கள்ளத்தொடர்பு குறித்து அறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அவர் இருவரையும் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சொந்த பெரியப்பா மகனுடன் திருட்டுத்தனமாக உறவு! தகராறில் காதலனே கடைசியில் எமனாக மாறிய கொடூரம்.... சடலத்தை எரித்து பகீர் பின்னணி...!!!

வயல்வெளியில் அரங்கேறிய கொடூர தாக்குதல்

தகவலின்படி, புதன்கிழமை அதிகாலை அமித் வீட்டை விட்டு வெளியே சென்றபோது, அவரை தம்பி போலா பின்தொடர்ந்து சென்றுள்ளார். ஆள்நடமாட்டம் குறைந்த வயல்வெளிப் பகுதிக்கு சென்றபோது, அமித்தின் தலையில் கல்லை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது.

அதன்பின் முகத்தில் கடுமையாக தாக்கியதுடன், துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் அமித்தின் உடல் ரத்த வெள்ளத்தில் வயலில் கிடந்ததை அப்பகுதி மக்கள் கண்டு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

சிசிடிவி காட்சியில் சிக்கிய தம்பி

கொலைக்குப் பிறகு எதுவும் தெரியாதது போல நடந்துகொண்ட போலா மீது, அப்பகுதியில் பதிவான CCTV காட்சிகளின் அடிப்படையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை காவலில் எடுத்து தீவிரமாக விசாரித்தனர்.

விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படும் போலாவை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கண்காணிப்பில் உள்ள மனைவி

இதற்கிடையில், தங்களது உறவு தொடர்பான விவகாரம் வெளியில் தெரிந்ததை அடுத்து குஷி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக மீட்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வருவதுடன், போலீசாரின் கண்காணிப்பிலும் உள்ளார். வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: இன்ஸ்டா மூலம் மலர்ந்த காதல்! ஆறு மாசமா லிவ்-இன் உறவு.... நாடுராத்திரியில் நடந்த விபரீதம்! வக்கீல் கொடுத்த ரகசியப் புகாரால் வெளியான பகீர் உண்மைகள்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Agra Murder #உத்தரப் பிரதேசம் #Crime news #police investigation #கள்ளத்தொடர்பு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story