×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நாளை முதல் எந்தெந்த தொழில்கள் இயங்கும்.? மத்திய அரசு வெளியிட்ட பட்டியல்!

After april 20 what will be start

Advertisement

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் 500-ஐ எட்டுகிறது. இந்தநிலையில், கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் 21 நாள் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை, மே 3ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.


ஆனாலும், அதிக பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20 ஆம் முதல் நிபந்தனையுடன் சில தளர்வுகள் அளிக்கப்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தநிலையில் 20-ந்தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும் சேவைகள், தொழில்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதனை மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

1.ஆயுஷ் உள்பட அனைத்து மருத்துவ சேவைகள் செயல்படும்.


2.வேளாண் மற்றும் தோட்டத் தொழில்களுக்கு அனுமதி.

3.மீன்பிடித் தொழில் தொடர்ந்து இயங்கும்.

4.தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டத் தொழில்கள், அதிகபட்சம் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்.


5.நிதித்துறை மற்றும் சமூக நலத்துறை செயல்படும்.

6.தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடரும். இதில் ஊழியர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

7. பொது வினியோகத்துறை செயல்படும்.

8.மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி.

9.ஆன்லைன் மூலம் கற்பித்தல் மற்றும் தொலைதூர கல்விக்கு அனுமதி.

10.அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யலாம்.

11. வர்த்தகம், தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்.

12.கட்டிட தொழில்களை தொடர அனுமதி.

13. தனியார் வாகனங்களை மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்காக இயக்கலாம்.

14.அனைத்து மத்திய, மாநில, யூனியன் பிரதேச அலுவலகங்கள் செயல்படும்.

இந்த அறிவிப்புகள் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள பகுதிகளுக்கு (ஹாட்ஸ்பாட்) பொருந்தாது என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #144
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story