×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி.. பாஜகவில் இணைகிறாரா நடிகை தமன்னா?.. அரசியல் பிரவேசத்தில் அல்டிமேட் வருகை?.!

ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி.. பாஜகவில் இணைகிறாரா நடிகை தமன்னா?.. அரசியல் பிரவேசத்தில் அல்டிமேட் வருகை?.!

Advertisement

 

துணை முதல்வருடன் நடிகை தமன்னா எடுத்துக்கொண்ட போட்டோவை வைத்து அவர் பாஜகவில் இணையவுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே பணியாற்றுகிறார். இவர் அதிருப்தியில் இருந்த சிவசேனா எம்.எல்.ஏக்களை கைக்குள் போட்டுகொண்டு, சிவசேனா - காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை கலைத்துவிட்டு பாஜக தலைமையில் கூட்டணியாட்சியை நிறுவினார். 

சமீப காலமாகவே பாரதிய ஜனதா கட்சிக்கு வரவேற்பு அதிகம் கிடைப்பதாக பிம்பப்படுத்தப்பட்டு வரும் நிலையில், முக்கிய நடிகர்கள் மற்றும் விஐபிக்கள் போன்றோரும் அக்கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை தமன்னாவும், அம்மாநில துணை முதல்வர் & பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் நவராத்திரி திருவிழாவில் ஒருவரையொருவர் நேரில் சந்தித்து விழாவை சிறப்பித்தனர். அப்போது, தமன்னா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் கோடக் உடன் எடுத்த புகைப்படத்தை தேவேந்திர பட்னாவிஸ் பதிவு செய்துள்ளார். 

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகவே, நடிகை தமன்னா பாஜகவில் இணையப்போகிறாரா? என்ற கேள்விகளும் நெட்டிசன்களால் எழுப்பப்பட்டு வந்தது. மேலும், தேவேந்திர பட்னாவிசின் ட்விட்க்கு நடிகை தமன்னாவும் நன்றி தெரிவிக்கும் வகையில் ரிப்ளை செய்துள்ளார். 
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamannah #Indian Actress #bjp #politics #tamilnadu #தமன்னா #இந்திய நடிகை #பாஜக
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story