தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இவங்களையெல்லாம் அடிப்பதில் தப்பே இல்லை! ஆவேசத்துடன் எச்சரிக்கை விடுத்த 'ஐ' படநடிகர்!

Actor suresh gobi talk about lockdown

actor-suresh-gobi-talk-about-lockdown Advertisement

இந்தியாவில் கொரோனா வைரஸ்  பரவியநிலையில், தற்போது 2000க்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனோவை கட்டுப்படுத்த  ஊரடங்கு பிறப்பிக்கபட்டுள்ளது.  மேலும் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும் அத்தியாவசிய தேவைகளுக்கு இன்றி, ஆர்வக்கோளாறில் பலரும் ஒன்றாக வெளியே சுற்றி வருகின்றனர். இந்நிலையில் அவர்களை கட்டுப்படுத்த போலீசார்கள் லத்தியால் அடித்தும். தோப்புகரணம் போடுதல் போன்ற நூதன தண்டனைகளை கொடுத்தும் வருகின்றனர். இதற்கு சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் சமஸ்தானம்,  தீனா,  ஐ போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சுரேஷ் கோபி. இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார்.

 

suresh gobi

இவர் ஊரடங்கை மதிக்காமல் வெளியில் சுற்றுபவர்களை போலீசார் லத்தியால் அடிப்பது  குறித்து கூறியதாவது, ஊரடங்கை மீறி நடப்பவர்களை முக்கியமான உறுப்புகள் பாதிக்காத வகையில் போலீசார் அடிப்பதில் எந்த தவறும்  இல்லை. சிலரை அடித்துத்தான் திருத்த முடியும். இதற்காக போலீசார் மீது புகார் சொல்ல கூடாது.  போலீசார் மக்களுக்காக வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்க கூடாது. அவர்களின் சேவையை மனதார பாராட்ட வேண்டும். 

மேலும் நிலைமை எல்லை மீறி போகும் பட்சத்தில்  ராணுவத்தைதான் அழைக்க வேண்டும். இதனை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளுங்கள். போலீசார் செயலை எல்லோரும் ஆதரிக்க வேண்டும் என சுரேஷ் கோபி கூறியுள்ளார்.

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#suresh gobi #lockdown
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story