×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அமலாக்கத் துறையின் அதிரடி நடவடிக்கை.. நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்திற்கு சீல்...

அமலாக்கத் துறையின் அதிரடி நடவடிக்கை.. நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்திற்கு சீல்...

Advertisement

‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை சீல் வைத்துள்ளனர் சட்டவிரோத பண பரிமாற்றம் என குற்றச்சாட்டு. 

புதுடெல்லி, இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு சுதந்திரத்துக்கு முன்பு தொடங்கிய பத்திரிகைதான் இந்த 'நேஷனல் ஹெரால்டு'. இந்த பத்திரிகையை மேம்படுத்த காங்கிரஸ் கட்சி அளித்த வட்டியில்லா கடன் 90 கோடி ரூபாயை அந்த நிறுவனம் திரும்ப செலுத்தவில்லை. இதன் காரணமாக அந்த பத்திரிகையை வெளியிட்டு வந்த 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' நிறுவனத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி, இயக்குனர்களாக இருக்கும் 'யங் இந்தியா' நிறுவனம் கையகப்படுத்தியது. 

இதனால் 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' நிறுவனத்தின் இரண்டாயிரம் கோடி சொத்துகளை 'யங் இந்தியா' அபகரித்துவிட்டது என்று பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடுத்தார். அது டெல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும் இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக எண்ணி அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி இருவரிடமும் அமலாக்கத்துறை பல நாட்கள் விசாரணை செய்தது. 

இந்த சூழ்நிலையில் நேற்று அதிரடியாக டெல்லியில் ஐ.டி.ஓ. பகுதியில் பகதூர் ஷா ஜப்பார் மார்க்கில் அமைந்துள்ள, 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை அலுவலகம், மற்றும் அதனுடன் தொடர்புடைய பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பான  ஆதாரங்களை சேகரிப்பதற்காக சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ், இந்த சோதனைகள் நடைபெற்றன. 

இந்நிலையில் 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை அலுவலகத்திற்கு இன்று அமலாக்கத்துறையினர் சீல் வைத்தனர்.  'நேஷனல் ஹெரால்டு' அலுவலகத்தை அமலாக்க துறையின் அனுமதியின்றி திறக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோனியா காந்தி, ராகுல் காந்தி இவர்களின் வீட்டிற்கு முன் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #enforcement department #National Herald #Press office seal
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story