×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணத்திற்கு வரன் தேடுபவர்களே உஷார்.! 46 லட்சத்தை பறி கொடுத்த இளைஞர்.!

திருமணத்திற்கு வரன் தேடுபவர்களே உஷார்.! 46 லட்சத்தை இப்படி கொடுத்த இளைஞர்.!

Advertisement

திருமணத்திற்கு வரன்  தேடிய ஒரு இளைஞரை ஏமாற்றி, 46 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஒரு இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. புதுவை மாநிலம், மூலக்குளம் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் வயது 33 என்பவர் சென்னையிலிருக்கின்ற ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் திருமணத்திற்காக வரன் தேடி வந்தார். ஆகவே அதற்காக பல திருமண தகவல் மையங்களில் தன்னைப் பற்றிய விவரங்களை வழங்கியிருந்தார். அவர் திருமண தகவல் மையத்தில் தன்னைப் பற்றிய விவரங்களை கொடுத்து, 2 மாதங்கள் சென்ற பின்னர் இங்கிலாந்து நாட்டிலிருந்து ஒரு பெண் போன் செய்திருக்கிறார். அவர், தான் தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், தன்னுடைய குடும்பம் இங்கிலாந்தில் வசித்து வருகிறது என்றும் கூறினார்.

மேலும், தான் இங்குள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், தனக்கு குடும்பத்தினர் மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், உங்களுடைய விவரங்களை திருமண தகவல் மையத்திலிருந்து பெற்றேன் என்றும் கூறியுள்ளார் . பின்னர் இருவரும் தொலைபேசி மூலமாகவும், வாட்ஸ் அப் செயலி மூலமாகவும் பழகி வந்திருக்கிறார்கள்.

அவர்கள் இருவரும் பழகி வந்தபோது, அந்த பெண் அவர் குறித்த பல்வேறு குடும்ப புகைப்படங்களை அந்த இளைஞருக்கு அனுப்பியிருக்கிறார். அதோடு, தன்னுடைய மாமா இங்கிலாந்தில் கிரிப்டோ கரன்சியின் மூலமாக முதலீடு செய்து மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் எனவும், அதில் நல்ல லாபம் கிடைக்கிறது எனவும், உங்களுக்கு நான் கற்றுக் கொடுக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

இதைக்கேட்ட ராமகிருஷ்ணன் அந்த பென் தெரிவித்த அனைத்துக்கும் ஒப்புக்கொண்டார். அதனடிப்படையில், ராமகிருஷ்ணன் பெயரிலேயே பிட் மார்ட் மற்றும் பைனான்ஸ் போன்ற நிறுவனங்களில் கணக்கை ஆரம்பித்து, முதலீடு செய்யுங்கள் என்று அந்த பெண்மணி கூறியிருக்கிறார். ஆகவே சென்ற மாதத்தில், 46 லட்சம் ரூபாயை பல்வேறு தவணைகளின் மூலமாக செலுத்தியிருக்கிறார்.

 ஆனாலும், அவருடைய கணக்கில் இருக்கின்ற பணத்தை வேறொரு கணக்கிற்கு நேரடியாக மாற்றியிருக்கிறார்கள். அவருடைய கணக்கில் பணமில்லை என்பதை அறிந்து கொண்ட ராமகிருஷ்ணன், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்டார். இது பற்றி உடனடியாக இணைய வழி காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார். இது குறித்து கார்த்திகேயன் மற்றும் கீர்த்தி உள்ளிட்ட காவல் ஆய்வாளர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Pandycherry #England #marriage #Police Investication #Cripto Currency
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story