×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நண்பர்களுடன் நடந்து சென்ற இளைஞர்... தும்மல் வந்து சரிந்து விழுந்து உயிரிழந்த பரிதாபம்..!!

நண்பர்களுடன் நடந்து சென்ற இளைஞர்... தும்மல் வந்து சரிந்து விழுந்து உயிரிழந்த பரிதாபம்..!!

Advertisement

உத்தர பிரதேச மாநிலத்தில் நண்பர்களுடன் நடந்து சென்ற இளைஞர் திடீரென வந்த தும்மலுக்கு பிறகு, சரிந்து விழுந்து, உயிரிழந்த சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது

உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் கித்வாய்நகர் காலி பகுதியை சேர்ந்த ஜுபைர் (18) என்பவர் இரவில் வீட்டிற்கு செல்வதற்காக தனது நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டு இருக்கும் போது அவருக்கு தும்மல் வந்துள்ளது. நடந்தபடியே தும்மிய அந்த இளைஞர் சிறிது நேரத்திற்கு பிறகு, நண்பரின் தோளில் கைபோட்டபடி சோர்வாக நடந்து செல்லும் போதே, திடீரென சரிந்து, விழுந்துள்ளார். 

இதனால், பயந்து போன அவரது நண்பர்கள் உதவி கேட்டு அலறியுள்ளனர். பிறகு அங்கிருந்தவர்கள் உதவியுடன் அந்த இளைஞரை ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு சென்றனர். மருத்துவர் அந்த இளைஞர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.  தும்மலை தொடர்ந்து, மாரடைப்பு ஏற்பட்டு அந்த இளைஞர் உயிரிழந்து இருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர். 

18 வயது இளைஞர் ஒருவர், இரவில் நண்பர்களுடன் நடந்து செல்லும் போது திடீரென தும்மல் வந்ததில், சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Uttar pradesh #A young #walking with his friends #Sneezed and Collapsed and Died
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story