நெஞ்சை உலுக்கும் சம்பவம்.... ட்ரம்முக்குள் கிடந்த 4 பிஞ்சு சடலங்கள்... தற்கொலை செய்து கொண்ட தாய்.! காவல்துறை விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!
நெஞ்சை உலுக்கும் சம்பவம்.... ட்ரம்முக்குள் கிடந்த 4 பிஞ்சு சடலங்கள்... தற்கொலை செய்து கொண்ட தாய்.! காவல்துறை விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு தாயே தனது 4 குழந்தைகளையும் கொலை செய்த சம்பவம் நாட்டையே அதிரச் செய்திருக்கிறது. 4 குழந்தைகளையும் கொலை செய்த பிறகு அந்த தாயும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது தொடர்பாக காவல்துறையினர் திவீரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் பார்பர் மாவட்டத்தில் நடைபெற்று இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறைக்கு பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பார்த்தபோது அதிர்ச்சியாகி இருக்கின்றனர்.
தனது 4 சிறு குழந்தைகளையும் ஒரு இரும்பு ட்ரம்மில் அடைத்து வைத்து அந்தப் பெண் கொலை செய்து இருக்கிறார். அதன் பிறகு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களது சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்தப் பெண் தனது கணவருடன் சண்டை போட்டதாக தெரிகிறது. அந்த விரக்தியில் இனி வாழவே வேண்டாம் என்று தனது குழந்தைகளையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.