×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்ன இந்த கிராமத்தில் தீபாவளியே கொண்டாடுவதில்ல்லையா.? வெளியான அதிர்ச்சி காரணம்.!

என்ன இந்த கிராமத்தில் தீபாவளியை கொண்டாடுவதில்ல்லையா.? வெளியான அதிர்ச்சி காரணம்.!

Advertisement

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்திலிருக்கின்ற ரனஸ்தலம் அருகேவுள்ள புன்னானா பாலம் என்ற கிராமத்தைச் சார்ந்தவர்கள் 7 தலைமுறையாக தீபாவளி பண்டிகையை கொண்டாடாமலிருக்கிறார்கள். இந்த கிராமத்தில், சுமார் 2000க்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த பகுதியில் 95 சதவீதம் புன்னானா என்ற தலைமுறை சார்ந்தவர்கள் தான் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த கிராமத்தில் பல வருடங்களுக்கு முன்பு வரையில், இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாடிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் ஒரு முறை தீபாவளி பண்டிகையின்போது நடைபெற்ற துரதிஷ்டவசமான பல்வேறு சம்பவங்களை காரணமாக வைத்துக் கொண்டு, இந்த கிராமத்திலிருப்பவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடாமல் வாழ்ந்து வருகிறார்கள்.

அதாவது, இந்த கிராமத்தினர் தீபாவளி பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்தபோது,  புன்னானா வம்சத்தைச் சார்ந்த ஒரு குழந்தை தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தது. அந்த குழந்தையை பாம்பு தீண்டி பரிதாபமாக மரணமடைந்தது. இதனைத் தொடர்ந்து, பண்டிகை முடிவடைந்து 3வது நாளில் ,2 காளை மாடுகள் உயிரிழந்தன.

இந்த 2 சம்பவங்களும் அந்த ஒட்டுமொத்த கிராமத்தையும் அதிர்ச்சியிலாழ்த்தியது. இதன் காரணமாகவே, அந்த கிராமத்திலுள்ள நபர்கள் தீபாவளியை கொண்டாடினால், துர்திஷ்டம் என்று நினைத்துக் கொண்டனர். ஆகவே வருடம் தோறும் அவர்கள் தீபாவளி பண்டிகையை புறக்கணித்து வருகிறார்கள்.

பல்வேறு தலைமுறைகளாக இளைய தலைமுறையை சேர்ந்தவர்களுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என்று எச்சரித்து வருகிறார்கள். அதன் காரணமாகவே இன்றைய கால இளைஞர்கள் கூட தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதில் ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள். வெளியூர்களில் திருமணம் செய்தவர்கள் அவர்களுடைய மாமனார் வீட்டிற்கு சென்று தீபாவளியை கொண்டாடலாம்.

ஆனால், உள்ளூரில் பெண்ணெடுத்த நபர்கள் தலை தீபாவளி கூட கொண்டாட முடியாத சூழ்நிலை அந்த கிராமத்தில் இருந்து வருகிறது. மூடநம்பிக்கையின் காரணமாக, 7 தலைமுறைகளாக இந்த கிராமத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படாமலிருக்கிறது என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகவுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Andira #Srikakulam #Diwali #Diwali Festival #India
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story