×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்தியாவில் கொடிய பூஞ்சை தொற்றால்; 5¾ கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக... ஆய்வில் பகீர் தகவல்...!!

இந்தியாவில் கொடிய பூஞ்சை தொற்றால்; 5¾ கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக... ஆய்வில் பகீர் தகவல்...!!

Advertisement

இந்தியாவில் கொடிய பூஞ்சை தொற்றால் 5¾ கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

இந்தியாவில் பூஞ்சை தொற்று அதிகமாக காணப்படுகிறது. ஆனால் அதன் பரவல் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இதில் நாடு முழுவதும் முதல் முறையாக ஆய்வு செய்யப்பட்டு பூஞ்சை நோய் குறித்த பாதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும், டெல்லி மற்றும் மேற்கு வங்காள எய்ம்ஸ், சண்டிகாரின் ஜிமர் போன்ற உயர் மருத்துவ நிறுவனங்களை சேர்ந்த ஆய்வாளர்களும், இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர். 

தொற்று நோய்கள் குறித்த ஆய்வு பத்திரிகை ஒன்றில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வகையான கொடிய பூஞ்சை தொற்றால் நாடு முழுவதும் 5 கோடியே 72 லட்சத்து 50 ஆயிரத்து 826 பேர், அதாவது இந்திய மக்கள் தொகையில் 4.4 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதில் அச்சுறுத்தும் கொடிய தொற்றால் 10 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 

டினியா கேப்பிட்டிஸ் எனப்படும் முடிப்பூஞ்சை தொற்றால் பள்ளி செல்லும் சிறுவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளனர். பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 2.4 கோடி பெண்கள் பிறப்புறுப்பு தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது. நுரையீரல் மற்றும் சைனஸ் பூஞ்சை தொற்றுகள் 2.5 லட்சம் பேரை பாதித்துள்ளது. இந்த தொற்று மரணத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. 

மேலும் நாள்பட்ட சுவாச மண்டல தொற்றால், 17 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தீவிர ஒவ்வாமை நுரையீரல் தொற்றால் 35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. பூஞ்சை நோய்களால் ஏற்படும் பாதிப்பு மிகப்பெரியது எனவும், ஆனால் இது குறித்து குறைவாக மதிப்பிடப்படுவதாகவும் இந்த ஆய்வு குழுவின் தலைவரும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டருமான அனிமேஷ் ராய் தெரிவித்துள்ளார். இந்தியாவில் காசநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு, 30 லட்சத்துக்கு மேல் இருக்கும் நிலையில், பூஞ்சை தொற்றுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Fungal infection #Indian Affected #A study revealed
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story