தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பல்கலைக்கழக விடுதி பாத்ரூமில் ரகசிய கேமரா... சக மாணவி செய்த கேவலமான செயல்.. வீடியோ வெளியானதால் போராட்டம்..!

பல்கலைக்கழக விடுதி பாத்ரூமில் ரகசிய கேமரா... சக மாணவி செய்த கேவலமான செயல்.. வீடியோ வெளியானதால் போராட்டம்..!

A secret camera in the bathroom of the university hostel.. A student did a nasty act.. The video was released and the protest started. Advertisement

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இருக்கும் தனியார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் சக மாணவிகளின் தனிப்பட்ட வீடியோக்களை வெளியிட்டது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

பிரபல சண்டிகர் பல்கலைக்கழத்தில் படிக்கும் மாணவர்கள் மத்தியில், பெண்கள் குளிக்கும் வீடியோ போன்றவை வேகமாக பரவி வந்தன. இந்த வீடியோக்கள், சண்டிகர் பல்கலைக்கழத்தில் இருக்கும் மாணவிகள் விடுதியில் எடுக்கப்பட்டவை என்பதால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் யாரேனும் செய்திருக்கலாம் என்று முதலில் சந்தேகம் எழுந்தது. ஆனால், எம்.பி.ஏ முதலாம் வருடம் படிக்கும் மாணவி ஒருவர் இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டதாக கூறப்படுகிறது. மேலும் பாத்ரூமில் ரகசிய கேமரா வைத்து இந்த வீடியோக்களை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோக்கள் அனைத்தையும் இணையதளத்தில் கசிய விட்டுள்ளார்.

அதன் பிறகு மாணவர்கள் மத்தியில் இந்த வீடியோக்கள் வைரலானதாக கூறப்படுகிறது. இந்த தகவலால் பெற்றோர்களும் மாணவிகளும் அதிர்ச்சியடைந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குளியலறையில் ரகசிய கேமரா வைத்து இந்த கேவலமான செயலை செய்த மாணவி குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும், தற்போது காவல்துறையினர் அந்த மாணவியிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. வீடியோவால் கடும் மன உளைச்சல் அடைந்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே மாணவிகள் சிலர் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல்களை பல்கலைக்கழக நிர்வாகமும் காவல்துறையினரும் மறுத்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #punjab #University #Girls hostel videos #பஞ்சாப் மாநிலம் #பல்கலைகழகம் #மாணவி #தனிப்பட்ட வீடியோ
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story