என்னது! மஞ்சள் நிறத்தில் ஆமையா? ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்க்க திரண்ட ஊர்மக்கள்! வைரலாகும் அதிசய வீடியோ!
A rare yellow turtle spottet on odisha
ஒடிசா மாநிலம் பல்சோரி மாவட்டம் சுஜன்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் பசுதேவ் மகாபத்ரா. இவர் நேற்று தனது தோட்டப்பகுதியில் வேலைபார்த்து கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் மஞ்சள் நிறமுடைய அரியவகை ஆமை ஒன்று இருந்துள்ளது. முழுவதும் மஞ்சள் நிறத்தில், பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருந்த அந்த ஆமையை பசுதேவ் தனது வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.
மேலும் சாதாரணமான ஆமையை போல இல்லாமல் வித்தியாசமான நிறத்தில், மென்மையாக இருந்த இந்த ஆமையை குறித்த தகவல் ஊர் முழுவதும் பரவியநிலையில், அதனை காண அப்பகுதியை சேர்ந்த மக்கள் பலரும் பசுதேவின் வீட்டில் குவிந்துள்ளனர். மேலும், அவர்கள் அந்த அரியவகை ஆமையை கண்டு நம்பமுடியாமல் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து பசுதேவ்வின் வீட்டிற்கு விரைந்த வனத்துறையினர் மஞ்சள் நிற அதிசய ஆமையை கைப்பற்றினர். மேலும், இந்த ஆமை அல்பினோ எனப்படும் அரியவகை ஆமை இனத்தை சேர்ந்தது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்த வீடியோவை வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.