×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கேரளாவில் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட செவிலியர் உயிரிழப்பு.... உணவகங்களில் அதிரடி சோதனை..!!

கேரளாவில் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட செவிலியர் உயிரிழப்பு.... உணவகங்களில் அதிரடி சோதனை..!!

Advertisement

கேரளாவில் மந்தி பிரியாணி சாப்பிட்ட நர்ஸ் பலியானார். 429 உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டு 43 உணவகங்கள் மூடப்பட்டது. 

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் ரேஷ்மி(33). இவர் அரசு மருத்துவமனையில் நர்ஸ்ஸாக வேலை செய்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு கோட்டயத்தில் இருக்கும் ஒரு உணவகத்தில் அல்பாமா சிக்கனும் மந்தி பிரியாணியும் சாப்பிட்டுள்ளார். அவருக்கு சாப்ப்பிட்ட சில மணி நேரத்திலேயே வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டுள்ளது. அவரை  உடனே மருத்துவமனையில் சேர்த்தனர். உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதுமட்டுமின்றி அந்த உணவகத்தில் சாப்பிட்ட 20 பேருக்கு மேல் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நர்ஸ் ரேஷ்மி இறந்ததை தொடர்ந்து அவர் பிரியாணி சாப்பிட்ட உணவகத்தை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கடைக்கு சீல் வைத்தனர். அதோடு உணவின் தரம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கேரள சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கோட்டயத்தில் உள்ள அனைத்து உணவகத்திலும் சோதனை நடத்த  உத்தரவிட்டார். உணவுப் பாதுகாப்புத் துறையினர் மாநிலத்தில் உள்ள 429 உணவகங்களில், செவ்வாய்க்கிழமை அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டதாக சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். 

சோதனையில், 43 நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 138 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பரிசோதனைக்கு 44 உணவகங்களில் இருந்து உணவு மாதிரிகள் அனுப்பப்பட்டன. ஆய்வுகள் வரும் நாட்களிலும் தொடரும் என்று அமைச்சர் கூறினார். மந்தி பிரியாணி சாப்பிட்டு நர்ஸ் ரேஷ்மி உயிரிழந்த சம்பவம் உணவு பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் ரேஷ்மி மரணம் பற்றிய செய்தி வெளியான உடன் போராட்டங்கள் வெடித்தன. உணவகத்தை, இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தாக்கி அதன் பெயர் பலகையை உடைத்தனர். கேரளாவில், கல்லூரி மாணவி ஒருவர், கடந்த வருடம் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #KERALA #Ate biryani in a restaurant #Nurse casualties #Action check in restaurants
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story