×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முன்னால் சென்ற வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய கண்டெய்னர் லாரி...10 பேர் பலி..கோர விபத்து...!!

முன்னால் சென்ற வாகனங்கள் மீது அடுத்தடுத்த மோதியை கண்டெய்னர் லாரி...10 பேர் பலி..கோர விபத்து...!!

Advertisement

மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் உள்ள பலாஸ்னர் கிராமத்தின் அருகே கண்டெய்னர் லாரி மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் இன்று கண்டெய்னர் லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற வாகனங்கள் மீது மிக பயங்கரமாக மோதியது. 

இன்று காலை 10.45 மணியளவில் மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் இருக்கும் பலாஸ்னர் கிராமத்தின் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பிரேக் பிடிக்காததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி, இரண்டு பைக், ஒரு கார் மற்றும் மற்றொரு கண்டெய்னர் மீது அடுத்தடுத்து மோதியது. 

அதன் பின்னர் பேருந்து நிறுத்தம் அருகில் இருந்த உணவகத்திற்குள் நுழைந்து கவிழ்ந்தது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி பரவி வருகிறது.

இந்த கோர விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. அந்த கண்டெய்னர் லாரி துலே மாவட்டத்தில் இருந்து மத்திய பிரதேசம் நோக்கி சென்றதாக கூறப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #maharashtra #accident #10 Killed #Container Lorry Collided
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story