×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அரபி பாடசாலையில் 15 வயது மாணவனை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்திய ஆசிரியர்... 67 வருடம் கடுங்காவல் தண்டனை..!!

அரபி பாடசாலையில் 15 வயது மாணவனை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்திய ஆசிரியர்... 67 வருடம் கடுங்காவல் தண்டனை..!!

Advertisement

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சொர்ப்புள சேரி பகுதியில் வசித்து வருபவர் ரஷீத் (49). இவர் அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு அரபி பாடசாலையில், ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.

கடந்த 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி அவரிடம் படிக்கும் 15 வயது மாணவன் சந்தேகம் கேட்பதற்காக அவரது அறைக்கு சென்ற போது, ரஷீத் அந்த மாணவனை மிரட்டி ஓரினச்சேர்க்கை ஈடுபட்டுள்ளார்.

அந்த மாணவனின் பெற்றோருக்கு இது குறித்து தெரிய வந்தது உடனே அவர்கள் இது தொடர்பாக பாவரட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ஆசிரியர் ரஷீதை கைது செய்தனர்.

குன்னங்குளம் அதிவேக கோர்ட்டில் இந்த வழக்கு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லிஷா அரபி ஆசிரியர் ரஷீதுக்கு 67 வருடம் கடுங்காவல் தண்டனையும், 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

கல்வி நிலையங்களிலும், மத பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு பாதுகாவலராக இருக்க வேண்டிய ஆசிரியர்களே, இதுபோன்ற மோசமான செயல்களில் ஈடுபடுவது, மிகவும் கண்டனத்துக்குரியது. எனவே அவர்களுக்கு எந்த கருணையும் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதி தீர்ப்பு கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #KERALA #15 Year Old Student #Arabic School #Homosexuality
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story