கருவுக்கு டிஎன்ஏ சோதனை.. 5 மாத கர்ப்பிணி பெண் விபரீதம்.. சோகத்தில் குடும்பத்தினர்.!
DNA Test Demand Leads to Tragic Death: வயிற்றில் இருக்கும் கருவுக்கு கணவர் டிஎன்ஏ சோதனை நடத்தியதால் பெண் தற்கொலை செய்துகொண்டார்.
பிறக்காத குழந்தைக்கு கணவர் டிஎன்ஏ சோதனை வேண்டும் என கேட்டதால் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
தம்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டம், அல்லதுர்க் மண்டலம், கடிபெத்தாபுர் பகுதியில் வசித்து வருபவர் சுஷ்மிதா (வயது 23). அங்குள்ள விக்ரபாத் மாவட்டம், முதுகுப்பள்ளி கிராமத்தில் வசித்துபவர் அபிலேஷ். இவர் வளையல் வியாபாரியாக இருக்கிறார். சுஷ்மிதா - அபிலேஷுக்கு கடந்த 18 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் முடிந்துள்ளது.
இதையும் படிங்க: 15 வயதில் பிரசவம்.. குழந்தை பிறந்த சில நாட்களில் சிறுமி மரணம்.. காதல் திருமணத்தால் கிருஷ்ணகிரியில் ஷாக்.!
கர்ப்பிணி தற்கொலை:
இதனிடையே, தற்போது 5 மாத கர்ப்பமாக இருக்கும் சுஷ்மிதா, சம்பவத்தன்று தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக சுஷ்மிதாவின் தாய் ஜெயபால் அளித்த புகாரின் பேரில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது, மகளுக்கு அபிலேஸ் தொல்லை கொடுத்து வந்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.
டிஎன்ஏ சோதனை:
கடந்த ஜூன் 23ம் தேதி வளைகாப்பு நடந்த நிலையில், அபிலேஸ் டிஎன்ஏ சோதனை குறித்து கேட்டுள்ளார். கருவில் பிறக்காத குழந்தைக்கு டிஎன்ஏ சோதனை கேட்டு பெற்றோர்-உறவினர்கள் முன்னிலையில் எழுப்பிய கேள்வி குடும்பத்தினருக்கு வருவத்தை ஏற்படுத்த, அவர்கள் அங்கிருந்து வந்துள்ளனர். பின் மகளும் தற்கொலை செய்துகொண்டதால், அபிலேஷை கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதன்பேரில் அபிலேஸ், அவரின் தாய் லட்சுமி ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கர்ப்பிணி மனைவியை காலால் எட்டி உதைத்த கணவன்.. துள்ளத்துடிக்க கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்.!