கொரோனா பணியில் இருந்து திரும்பிய தாய்.! கண்ணீரை துடைத்து கட்டி அணைத்த 3 வயது மகள்..! நெகிழ்ச்சி சம்பவம்.
3 years old daughter meet her nurse mon after 20 days
கொரோனா வார்டில் சேவைபுரிந்துவந்த கர்நாடகாவை சேர்ந்த சுகந்தா என்ற செவிலியர் 20 நாட்களுக்கு பிறகு தனது மகளை மீண்டும் சந்தித்து, அவரை கட்டி அனைத்து கண்ணீர் விட்ட காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவும் என்பதற்காக கொரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவர்கள், செலிவியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில், கர்நாடாகாவை சேர்ந்த சுகாந்தா என்ற செவிலியர் கொரோனா வார்டில் சேவையாற்றிவந்த நிலையியல், அவரது 3 வயது மகள் தனது தாயை காணவேண்டும் என அழுது தாயை காண அவர் பணியாற்றும் மருத்துவமனை வரை வந்தார்.
தனது மகளை காண சுகந்தாவும் மருத்துவமனை வளாகம் வரை வர அனுமதிக்கப்பட்டார். ஆனால், ஒருவருக்கு ஒருவர் அருகில் சந்தித்திக்கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில், தனது தாய் கண் எதிரே நின்றும் அவரை கட்டி அணைக்க முடியாமல் அந்த சிறுமி கதறி அழுதார். மேலும், தனது தாயை பார்த்து அம்மா... அம்மா.. வா.. மா.. போகலாம் என சிறுமி கதறி அழுதார்.
குழந்தை அழுவதை பார்த்து சுகந்தவும் கண்ணீர் சிந்தினார். இந்த காட்சிகள் சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், 20 நாட்களுக்கு பிறகு சுகந்தா கொரோனா பரிசோதனைக்கு பிறகு வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
தனது தாய் வீட்டிற்கு வருவதை தெரிந்துகொண்ட அந்த சிறுமி, தெருவிலையே நின்று அவரை வரவேற்று அவரை கட்டி அணைத்து மகிழ்ந்துள்ளார். தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.