×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

17 வயது சிறுவனுடன் 21 வயது பெண் திருமணம் செய்தது தண்டனைக்கு உரிய குற்றம் இல்லை..! உச்சநீதிமன்றம் பரபர தீர்ப்பு!

21 years girl married 17 years old boy is not a punishable offense court says

Advertisement

பொதுவாக 18 வயதுக்கு குறைவாக உள்ள பெண்ணை திருமணம் செய்தால் இந்திய சட்டப்படி அது குற்றம். திருமணம் செய்தவரை கைது செய்து சிறையில் அடைக்க சட்டத்தில் இடம் உள்ளது. அதுவே, வயதில் மூத்த பொண்ணு 18 வயதுக்கு குறைவான சிறுவனை திருமணம் செய்தால் அது குற்றமா?

அது குற்றம் இல்லை என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது. சமீபத்தில் நடந்த வழக்கு ஒன்றில், 21 வயது பெண் 17 வயது சிறுவனை திருமணம் செய்துகொண்டார். இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் வரை சென்றது.

தற்போது இந்த வழக்கு குறித்த தீர்ப்பில் இதை குழந்தை திருமணமாக கருத முடியாது என்றும், மேலும், இது குற்றம் என கருதி அதற்கு தண்டனை வழங்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வயதில் தன்னை விட சிறிய பையனை திருமணம் செய்ததற்காக அந்த பெண்ணையும், வயது அதிகம் கொண்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்காக அந்த சிறுவனையோ தண்டிக்க முடியாது என்று நீதிபதி மோகன் சந்தான கவுடர் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Child marriage #marriage
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story