×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கையில் துண்டுசீட்டுடன் போலீஸ் உடையில் சாலையில் நின்ற 20 வயது இளம் பெண்..! கிட்டப்போய் பாத்தா..! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

20-year-old woman poses as cop issues fake Covid challans to make money

Advertisement

போலியாக போலீஸ் உடை அணிந்து,  போலியான ரசீதை கொடுத்து வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதித்து பணம் வசூலித்துவந்த 20 வயது இளம் பெண்ணை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ்  வேகமாக பரவிவரும்நிலையில் பெரும்பாலான இடங்களில் கடுமையான போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால் கொரோனா கட்டுப்பாடு விதிகளும் அதிகமாகவே உள்ளது. விதிகளை மீறுவோர் மீது போலீசார் அபராதம் விதித்துவருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் 20 வயது இளம் பெண் ஒருவர் காவல்துறை அதிகாரிபோல் உடை அணிந்து சாலையில் நின்றுள்ளார். விதிகளை மீறி அந்த வழியாக யாராவது வந்தால், உடனே வண்டியை நிறுத்தி அபராதம் விதித்து அவர்கள் கையில் சலானை கொடுத்துவந்துள்ளார்.

பார்ப்பதற்கு உண்மையான காவல்துறை அதிகாரிபோலவே கறாராகவும், கம்பீரமாகவும் இருந்த அந்த பெண்ணை பார்த்து சிலர் பயந்து ஒதுங்கியும் போய்யுள்ளனர். இப்படியே சென்றுகொண்டிருந்தநிலையில் உண்மையான காவலர்கள் இருவர் மஃப்டியில் அந்த பக்கமாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

அவர்களையும் தடுத்து நிறுத்திய அந்த பெண் அவர்களுக்கும் அபராதம் விதித்து போலி சலானை அவர்கள் கையில் நீட்டியுள்ளார். சலானை வாங்கி பார்த்த போலீசார் அது போலியான சலான் என்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அந்த போலியான போலீஸ் அதிகாரியை கைதுசெய்த போலீசார் தற்போது அவரை காவல்நிலையத்தில் வைத்து விசாரித்துவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mysterious #Crime #Police crime
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story