தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பகீர் சம்பவம்... ரீல்ஸ் எடுத்ததை தடுத்ததால் ஆத்திரம்.!! காவலர்களை பந்தாடிய பெண்கள்.!!

பகீர் சம்பவம்... ரீல்ஸ் எடுத்ததை தடுத்ததால் ஆத்திரம்.!! காவலர்களை பந்தாடிய பெண்கள்.!!

2-women-arrested-for-attacking-police-officers-who-stop Advertisement

மத்தியபிரதேச மாநிலத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்ற பெண்களை தட்டி கேட்டதால் 3 காவலர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பெண்களின் மேல் பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மத்தியபிரதேச  மாநிலத்தின் உஜ்ஜயின் நகரில் புகழ்பெற்ற மகாகாலேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வருகை புரிந்த 2 பெண்கள் தடை செய்யப்பட்ட பகுதியில் நின்று ரீல்ஸ் எடுக்க முயன்றுள்ளனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்கள் இது தடை செய்யப்பட்ட பகுதி இங்கு வீடியோ எடுக்க கூடாது என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக காவலர்கள் மற்றும் அந்தப் பெண்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியிருக்கிறது. ஆத்திரமடைந்த பெண்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 பெண் காவலர்களை கடுமையாக தாக்கி இருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் பாதுகாப்பு பணியில் இருந்த 3 பெண் காவலர்கள் பயமடைந்துள்ளனர்.India

இந்த சம்பவத்தால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த மற்ற காவல் துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட 2 பெண்களையும் கைது செய்தனர். அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 3 பெண் காவலர்களையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Madhya pradesh #Ujjain #Reels #Police Attacked #2 Women Arrested
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story