மர்ம கும்பலால் உருக்குலைந்து போன 18 வயது இளம்பெண்..! பகீர் பின்னணி..!!
மர்ம கும்பலால் உருக்குலைந்து போன 18 வயது இளம்பெண்..! பகீர் பின்னணி..!!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மோகன்புரா என்னும் பகுதியில் வசித்து வந்த 18 வயதுடைய பெண் ஒருவர் தொலைந்து போய் உள்ளார். இதனால் அவரது வீட்டார் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளனர். புகாரை ஏற்றுக் கொண்ட காவல் துறை பெண் குறித்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் அந்த இளம் பெண் சடலமாக கிடப்பதை கண்டுபிடித்தனர். பின் அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. பின்பு இது குறித்து விசாரணை நடைபெற்ற வந்தது.
இதில் கொலை செய்யப்பட்ட அந்த பெண் ஒரு கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும், அந்த பெண்ணின் முகத்தில் ஆசிட் விசி கொன்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பெண்ணின் முகம் அடையாளத் தெரியாதா வகையில் செய்து கிணற்றுக்குள் வீசிவிட்டு சென்றுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸ், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.