அசதியில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய 15 பேர்.! அதிகாலையில் வந்த சரக்கு ரயிலால் ஏற்ப்பட்ட கோர சம்பவம்..!
15 members accident train track

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் அவுரங்காபாத்-நாந்தேட் ரயில் பாதையில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய 15 வெளிமாநில தொழிலாளர்கள் மீது அதிகாலையில் வந்த சரக்கு ரயிலால் பலியான சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
ரயில் பாதையின் வழியாக மத்திய பிரதேசத்தை நோக்கி சென்ற 15 வெளிமாநில தொழிலாளர்கள் அசதி காரணமாக ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய உள்ளனர். அப்போது அதிகாலையில் வந்த சரக்கு ரயில் மோதியதில் 15 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவுரங்காபாத்தின் கர்மத் அருகே ஒரு விபத்து நடந்தது. நிலைமையை உறுதிப்படுத்த ஆர்.பி.எப் மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உள்ளனர். மற்ற விபரங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தென் மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.