எல்லாம் அந்த காலத்து சாப்பாடு.! கொரோனாவை வென்ற 105 வயது முதியவர் மற்றும் அவரது 95 வயது மனைவி.!
இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதி தீவிரமாக பரவிவருகிறது. கொரோனாவை கட்டுப்
இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதி தீவிரமாக பரவிவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் முக்கியமானவை, மகராஷ்ட்டிரா, டெல்லி. இங்கு கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு வருகிறது.
தற்போது மகாராஷ்டிராவில் நாள்தோறும் அதிக அளவில் கொரோனா பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மகாராஷ்டிராவில் 900 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் தேனு உமாஜி சவான் (வயது 105). இவரது மனைவி மோதாபாய் தேனு சவான் (வயது 95).
இந்த தம்பதி கடந்த மார்ச் 25ந்தேதி கொரோனா சிகிச்சைக்காக லத்தூரில் உள்ள கொரோனா பாதுகாப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து 10 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொண்ட அவர்கள் இருவரும் குணமடைந்து கடந்த 4 ஆம் தேதி வீடு திரும்பி சென்றனர். அவர்களுடைய அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் திருப்தியளிக்கும் வகையில் இருந்தன என கூறியுள்ளார். தற்போது கொரோனா பாதிப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், 100 வயதினை கடந்த முதியவர்கள் குணமடைந்து திரும்புவது மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது.