ஐஸ் பெட்டிக்குள் இருந்த 1000 கிலோ ஆட்டுக்கறி.! சோதனையில் ஈடுப்பட்ட அதிகாரிகள் எடுத்த அதிரடி முடிவு..!
1000kg goat meet recavared in puthuchari

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு விட்டன.
இந்நிலையில் புதுச்சேரி வில்லியானூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை புதுமேட்டுத் தெருவை சேர்ந்தவர் சித்திக். இவர் அப்பகுதியில் ஆட்டுக்கறி விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் ஆட்டுக்கறி விற்பனை செய்துள்ளார்.
அன்று சித்திக் விற்பனையான ஆட்டுக்கறிகளில் மீதி 1000 கிலோ இருந்துள்ளது. அந்த 1000 கிலோவையும் ஒரு பிளாஸ்டிக் பையில் கட்டி ஐஸ் பெட்டிக்குள் வைத்துள்ளார். இதுகுறித்து ரகசியமாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் கடைக்கு வந்து சோதனை செய்துள்ளனர்.
அப்போது ஐஸ் பெட்டிக்குள் இருந்த 1000 கிலோ ஆட்டுக்கறியை பறிமுதல் செய்து சோதனை செய்துள்ளனர். சோதனை முடிவில் அந்த 1000 கிலோ ஆட்டுக்கறியும் கெட்டுப்போனது என தெரியவந்துள்ளது. அதனை அடுத்து அந்த ஆட்டுக்கறியை அதிகாரிகள் ஆசிட் மற்றும் பினாயில் ஊற்றி அழித்து பின்னர் குழி தோண்டி அதனை புதைந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி ஆட்டுக்கறி உரிமையாளரான சித்திக் என்பவரை கைது செய்து கடைக்கு சீல் வைத்துள்ளனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.