×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குழந்தைகளுக்கு தடுப்பூசி ஏன் போடவேண்டும்? அதன் அவசியம் என்ன?

Why children should be vaccinated

Advertisement


தடுப்பூசி குழந்தை கருவில் இருக்கும் போது துவங்கி, பிறந்து ஒரு வயது வரை பல நோய்களுக்கு தொர்ந்து போடப்படும் மருந்து. இன்று நம்மில் நூற்றில் 95 பேராவது தடுப்பூசி போட்டிருப்போம். இயற்கையாகவே குழந்தைகளுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படும் அதை பெற்றோர்கள் தான் எதிர்க்கொள்ள வேண்டும். இது பெற்றோர்களின் கடமையாகும். மருத்துவர் பரிந்துரைக்கப்பட்ட நேரத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதால், அவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

சிலர் தடுப்பூசி போடவில்லை என்றால் அது பல விளைவுகளை உண்டாக்கும். அதாவது மீண்டும் தட்டம்மை உள்ளிட்ட நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளது. குழந்தை பிறந்தவுடனே எப்போதெல்லாம் தடுப்பூசி போடவேண்டும் என்ற பட்டியலை மருத்துவர்கள் தந்துவிடுவார்கள். அதனை சரியாக கடைபிடிக்க வேண்டும்.

பொதுவாகத் தட்டம்மை, பொன்னு வீங்கி போன்ற அம்மைகள் வராமல் தடுப்பதற்கு தனியார் மருத்துவமனைகளில் எம்.எம்.ஆர். தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். சிக்கன்பாக்ஸுக்கும் தடுப்பூசி இருக்கிறது. 

உடலில் நுழையும் நோய் கிருமிகளை எதிர்க்க நம் உடல் இயற்கையாகவே எதிர்ப்பு மருந்துகளை சுரக்க ஆரம்பித்துவிடும். சுரக்கும் மருந்தின் அளவானது ஒவ்வொரு மனிதர்களுக்கும் மாறுப்படும். இந்த எதிர்ப்பு மருந்தானது உடலுக்குள் நுழையும் போது உடலில் நுழைந்த கிருமிகளை  அழித்து உடல் நலம் சரியாகிவிடுகிறது.

குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகள் நன்மை பற்றி பெற்றோர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். சில தடுப்பூசி  மருந்துகள் குழந்தைகளுக்கு மிக மிக அவசியம். நாம் குழந்தைகளுக்கு ஆரம்பத்திலே சரியான நேரத்தில் தடுப்பூசிகளை போடாவிட்டால் எதிர்காலத்தில் கஷ்டப்படுவது நம் குழந்தைகள் தான் என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vaccination #injection #child
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story