தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இதோ உங்களுக்காக... அருமையான 'பனானா கிரேப் கேக்' தயார்...!

இதோ உங்களுக்காக... அருமையான 'பனானா கிரேப் கேக்' தயார்...!

Here is a delicious 'Banana Grape Cake' ready for you... Advertisement

பல மெல்லிய பான் கேக்குகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி செய்யப்படுவது 'கிரேப்' கேக் வகையாகும்.

அருமையான இனிப்பு சுவைக் கொண்ட வாழைப்பழ கிரேப் கேக் எவ்வாறு செய்யலாம் என்பதை பார்க்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்,
 
நான்கு வாழைப்பழங்கள்,  
இரண்டு முட்டை , 
எண்ணெய் நான்கு தேக்கரண்டி 
உப்பு - ¼ தேக்கரண்டி,
250 கிராம் மைதா மாவு, 
பேக்கிங் பவுடர் ஒரு தேக்கரண்டி,
5 கிராம் கோகோ பவுடர்,  
250 மில்லி கெட்டியாக காய்ச்சிய பால்,
250 மில்லி பிரஸ் கிரீம்,
25 கிராம் சர்க்கரை,
சாக்லேட் துண்டுகள், தேவையான அளவு.

செய்முறை;-

முதலில் நன்றாகப் பழுத்த இரண்டு வாழைப்பழத்தை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
மீதி இருக்கும் வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். 

பிறகு ஒரு பாத்திரத்தில் முட்டை, எண்ணெய், அரைத்த வாழைப்பழம் அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். 

பிறகு, மற்றொரு பாத்திரத்தில் கோகோ பவுடர், மைதா மாவு, பேக்கிங் பவுடர் மூன்றையும் நன்றாக சலித்துக்கொள்ளவும். 

பின்னர், இந்த மூன்றையும் கலந்து வைத்திருக்கும் முட்டைக் கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கவும். 

பிறகு அந்தக் கலவையில் சிறிது சிறிதாக காய்ச்சிய பாலை ஊற்றி தோசை மாவு பதத்துக்கு வரும் வரை நன்றாகக் கலக்கவேண்டும். 

பிறகு அந்த கலவையை மூடி, ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைக்கவும். அதன் பிறகு நான்ஸ்டிக் தவாவில், ஊற்றி சிறு சிறு தோசையாக மிதமான சூட்டில் சுட்டெடுக்கவும். 

மேலும் ஒரு பாத்திரத்தில் பிரெஷ் கிரீம், சர்க்கரை இரண்டையும் சேர்த்து, பீட்டர் கொண்டு கிரீம் பதத்திற்கு வரும் வரை பீட் செய்யவும்.  

பிறகு வாழைப்பழ பான் கேக் மீது, தயார் செய்த பிரெஷ் கிரீமைத் தடவி, அதன் மேல் வெட்டப்பட்ட வாழைப்பழத்தை வைக்க வேண்டும். 

அதன் பிறகு திரும்பவும் அதன் மேல் பிரெஷ் கிரீமைத் தடவவும். இதே போன்று, ஒன்றன் மீது ஒன்றாக வாழைப்பழ பான்கேக்குகளை அடுக்கவும். 

பின்பு அந்த அடுக்கின் மீது சாக்லேட்டை உருக்கி ஊற்றி அலங்கரிக்கவும். இப்பொழுது உங்களுக்கு சுவையான 'பனானா கிரேப் கேக்' தயார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Health recipes #Delicious #Banana Grape Cake #ready for you
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story