சாட்டை போல அடர்த்தி., கருகருவென நீண்ட முடி.! இதை செய்தால் பலன் நிச்சயம்.!
சாட்டை போல அடர்த்தி., கருகருவென நீண்ட முடி.! இதை செய்தால் பலன் நிச்சயம்.!
பெண்களின் அழகினை அதிகரித்து காட்டுவதில் முடி முக்கிய பங்காற்றுகிறது. நீளமோ, குட்டையோ முடியின் அடர்த்தி இன்னும் நம் அழகை மெருகூட்டுகிறது. சரியான பராமரிப்பின்மை, ரசாயன பொருள்கள் பயன்படுத்துதல், மாசு நிறைந்த சுற்றுசூழல், போன்ற காரணங்களால், வறண்டுபோய் முடியின் அடர்த்தி குறைவதுடன், பொடுகு, முடிஉடைதல், மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
மோசமான வேதிப்பொருள்கள் நிறைந்த எண்ணெய் மற்றும் ஷாம்பூக்களை பயன்படுத்துவதன் மூலம் ஏற்படுகின்ற பக்கவிளைவுகளை உணர்ந்த பின்னரே இயற்கைவழியின் மேன்மையை பலர் உணருகின்றனர். கருகருவென, சாட்டை போல நீண்ட அடர்த்தியான கூந்தலைப் பெற, சத்தான உணவுமுறை, இயற்கை பராமரிப்பு மற்றும் ஆரோக்கியமான உணவுமுறைப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவது அவசியம்.
முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதற்கான வழிமுறைகளில் மிகவும் முக்கியமானது சரியான உணவு மற்றும் ரசாயன கலப்பு இல்லாத கேச பராமரிப்பு.
இதையும் படிங்க: உயிருக்கே உலை வைக்கும் பாமாயில்.. இவ்வளவு ஆபத்துக்கள் நிறைந்ததா.?!
கேரள பெண்களின் ரகசியம் :
தேங்காய் எண்ணெய் முடிக்கு மிகவும் நல்லது. கேரள மாநிலத்தில் உள்ள பெண்களின் முடியின் நீளம் மற்றும் அடர்த்திக்கு முதல் காரணம் அவர்கள் தங்கள் கையாலேயே உருவாக்கும் தேங்காய் எண்ணெய் தான். இயற்கையாகவே அவர்களின் வாழிடம், உணவு முறையின் காரணமாக அவர்களுக்கு முடி மிக நீளமாகவும் ,செழிப்பாகவும் இருக்கும். அதற்கு அவர்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளும் தேங்காய் எண்ணெய்யும் முக்கிய காரணம்.
எப்படி பராமரிக்கலாம்?
தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் அல்லது மூலிகை எண்ணெய்களைப் பயன்படுத்தி உச்சந்தலையில் வைத்து சில நிமிடங்கள் தவறாமல் மசாஜ் செய்யவும். நன்றாக முடியின் வேரில் படுமாறு எண்ணையை விட்டு, மிருதுவாக தடவி மசாஜ் செய்யவேண்டும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடியின் வளர்ச்சியைத் தூண்டும்.
முடி உதிர்தலை தவிர்க்க தேங்காய் பாலினை எடுத்து முடியின் வேரில் விட்டு சில நிமிடங்கள் காயும் வண்ணம் விட்டுவிடவேண்டும். பின்னர் நன்றாக மசாஜ் செய்து தலைகுளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வறட்சியினால் ஏற்படும் முடி உதிர்தல் குறைகிறது. கருமையான தலைமுடிக்கு கருவேப்பிலை இன்றியமையாதது.
இன்றைய நவீன காலத்தில்சிறுவர்கள் முதல் இளையோர் என அனைவர்க்கும் இருக்கும் பிரச்சனை நரைமுடி. சுற்றுசூழல், மன அழுத்தம், கெமிக்கல் பொருள்கள் பயன்படுத்துதல், மற்றும் துரித உணவுகளின் காரணமாக இந்த பிரச்னை ஏற்படுகிறது. கறிவேப்பிலையுடன், செம்பருத்தி, தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி , அந்த எண்ணெயை தொடர்ந்து தடவி வர நரைமுடி மறைந்து முடி கருமையாக வளரும்.
இதையும் படிங்க: இளநரையை இயற்கையாக கருமையாக்க... தினசரி சாப்பிட வேண்டிய 7 அற்புத உணவுகள்.!