×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குழந்தைகளுக்கு காய்ச்சல்.. பாராசிட்டமால் கொடுக்கப்போறீங்களா? மருத்துவர்கள் எச்சரிக்கை.!

அலட்சியமான வகையில் குழந்தைகளுக்கு பாராசிட்டமால் மாத்திரை (Paracetamol Overdose in Children) கொடுத்தால், அது ஈரலை சேதப்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். காய்ச்சல் வந்தால் பெற்றோர் கவனமுடன் செயல்படவும்.

Advertisement

பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு காய்ச்சலின்போது பாராசிட்டமால் மாத்திரை () கொடுப்பதில் கவனம் தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தொடரும் அலட்சியம்:

பாராசிட்டமால் மாத்திரை பொதுவாக காய்ச்சலுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும். ஆனால், சமீபத்தில் பாராசிட்டமால் மாத்திரையை பெற்றோர் குழந்தைகளுக்கு அதிகமாக கொடுப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சில குழந்தைகள் மாத்திரையை சுயமாக எடுப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவர்கள் அதிர்ச்சி காரணத்தை விவரிக்கின்றனர். 

இதையும் படிங்க: அடக்கடவுளே... பிஞ்சு குழந்தை! கடுமையான சளி... மருத்துவர் கொடுத்த சொட்டு மருந்து! சில நொடிகளில் குழந்தை துடிதுடித்து.... பெரும் சோகம்!

அளவில் வித்தியாசம்:

மருத்துவர் பாராசிட்டமால் மாத்திரை தொடர்பாக விவரிக்கையில், "பாராசிட்டமால் மாத்திரையின் விளைவு தெரியாமல் அதனை சுயமாக பரிந்துரை செய்யக்கூடாது. இந்த மாத்திரையில் பல விதங்கள் இருக்கின்றன. அதிக மருந்து திறன் உள்ளதை குறைவான அளவு இருக்கும் நோய்க்கு கொடுத்தால், அது பக்கவிளைவை ஏற்படுத்தும். 250 mg க்கு பதிலாக 500 mg பயன்படுத்தினால் கல்லீரல் பாதிக்கப்படும். சில குழந்தைகள் மாத்திரைகளை விரும்பி சாப்பிடுகிறார்கள் என்பதால், குழந்தைகளின் கைக்கு எட்டாத வண்ணம் வைக்க வேண்டும். 

அறிவுரை & விழிப்புணர்வு வேண்டும்:

எப்போதும் மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப செயல்படுவது நல்லது. அதிகளவு மாத்திரை சாப்பிடுவதால் ஈரல் பாதிப்பு, ரத்தம் உறையும் தன்மையில் பிரச்சனையும் ஏற்படலாம். வீட்டில் கைவைத்தியம் கூடாது. ஒருவேளை குழந்தைகள் அதிகம் மாத்திரை எடுத்துக்கொண்டால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டும். வீட்டில் வைத்தியம் செய்ய கூடாது. ஒரு நாளைக்கு அதிகபட்சம் 6 மணிநேரத்துக்கு ஒருமுறை மட்டுமே மாத்திரை கொடுக்க வேண்டும். உரிய அறிவுரை பெற்றிருக்க வேண்டும்.

மாத்திரை கொடுப்பதில் கவனம்:

காய்ச்சல் உட்பட அனைத்து மருந்துகளும் அளவுக்கு மீறினால் நஞ்சு தான். அதிகம் குழந்தைகளுக்கு மாத்திரை கொடுத்தால் ஈரல் பிரச்சனை வந்துவிடும். குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத வகையில் மாத்திரைகளை பராமரிக்க வேண்டும். 100.4 டிகிரி போன்ற மிதமான காய்ச்சலுக்கு அதிகம் பயந்து அதிக மாத்திரை கொடுக்க கூடாது. ஏன் காய்ச்சல் வந்தது என மருத்துவரை சந்தித்து மூலகாரணத்துடன் வைத்தியம் செய்வது நல்லது. ஒருசில வீடுகளில் பெற்றோர் மாத்திரை கொடுத்தது தெரியாமல், பாட்டி-தாத்தா, மாமா, அக்கா போன்ற உறவினர்களும் மாத்திரையை கொடுப்பார்கள். இதுபோன்றவை தவிர்க்கப்பட வேண்டும்" என எச்சரிக்கின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Health #Paracetamol #பாராசிட்டமால் மாத்திரை #குழந்தை வளர்ப்பு #பெற்றோர்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story